அத்தையின் பாசம் ; பொய் சொல்லிய மீனாவை தேடி வந்த செந்தில்!
Pandian Stores 2 Serial 3rd to 8th November Promo Video : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் என்ன நடக்கும் என்பது தொடர்பான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

கோமதி அண்ட் மீனா
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான காட்சிகளை வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் கடந்த சில வாரங்களில் காந்திமதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சரவணன் மற்றும் தங்கமயிலின் வாக்குவாதம், கடையில் ரூ.1100 பணத்தை திருடிய மாணிக்கம், வீட்டை விட்டு வெளியில் செல்ல திட்டம் போட்ட தங்கமயில் என்று காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நம்பி கை கொடுத்த அஜித்... ரசிகர் செய்த செயல்! தல பகிர்ந்த ஷாக்கிங் தகவல்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இனி இந்த வாரம் நவம்பர் 3 ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையில் என்ன நடக்கும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். கடந்த வாரம் சனிக்கிழமையன்று தனது அத்தையின் வீட்டிற்கு வந்த மீனாவிற்கு கோமதி சுடச்சுட வடை சுட்டுக் கொடுக்க ஆர அமர உட்கார்ந்து மீனா அதனை சாப்பிட்டார். அப்போது போன் போட்ட செந்தில் வீட்டிற்கு எப்போது வருவ, நான் காய்கறிகள் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்துவிடுகிறேன் என்றார்.
கோமதியிடம் பொய் சொல்லிய மீனா
இதைப் பற்றி கோமதி கேட்க, உங்களது மகன் என்னை இங்கேயே இருக்க சொல்லிவிட்டார் என்றார். ஆனால், செந்தில் தொடர்ந்து மீனாவிற்கு போன் அடிக்க, அவர் எடுக்கவே இல்லை. பின்னர், தனது அம்மாவிற்கு போன் போட்டு மீனா என்ன செய்கிறார் என்று கேட்க, அவரும் உண்மையை சொல்லிவிட்டார். இதனால், ஆத்திரத்துடன் தனது வீட்டிற்கு செந்தில் வருவதுடன் புரோமோ வீடியோ முடிவடைகிறது.
அனிருத்தின் மாஸ் பிஜிஎம் உடன்... ஷாருக்கானின் பர்த்டே ஸ்பெஷலாக வெளிவந்த கிங் பட டீசர்