நம்பி கை கொடுத்த அஜித்... ரசிகர் செய்த செயல்! தல பகிர்ந்த ஷாக்கிங் தகவல்!
Ajith Painful Experience: தல அஜித், சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில்... 2005-ஆம் ஆண்டு ரசிகர் ஒருவர் தன்னுடைய கையை பிளேடால் வெட்டியா சம்பவம் பற்றி கூறியுள்ளார்.

அல்டிமேட் ஸ்டார் அஜித்:
தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் நடிகர் அஜித் குமார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'தீனா' படத்திற்கு பின்னர், இவரை ரசிகர்கள் அன்போடு 'தல' என அழைக்க துவங்கினர். தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த போதே... ரசிகர்ளை அழைத்து, தன்னுடைய ரசிகர்கள் மன்றத்தை கலைக்கும் படி அதிகார பூர்வமாக கோரிக்கை வைத்தார். அதே போல் தன்னுடைய படங்கள் வெளியாகும் சமயங்களில், பணத்தை கொட்டி, போஸ்டர் அடிப்பது, பேனர் வைப்பது, பட்டாசு கொளுத்தி, பாலபிஷேகம் செய்யும் செயல்களை கைவிடும் படி கேட்டுக்கொண்டார்.
உதவி வரும் ரசிகர்கள்:
ஆனால் ரசிகர்கள் இன்று வரை இதை தொடர்ந்து வருவதையும் பார்க்க முடிகிறது. அதே போல் அஜித்தின் வார்த்தைக்காக ரசிகர்கள் மன்றத்தை கலைத்தாலும், அவருடைய பெயரில் ரசிகர்கள் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள்.
மோசமான சம்பவம்:
அஜித் பல வருடங்களாக எந்த பேட்டியும் கொடுக்காமல் இருந்த நிலையில், கார் ரேஸில் கலந்து கொள்ள துவங்கிய பின்னர்... சில ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தனியார் ஊடகம் ஒன்றில் தல அஜித், தன்னுடைய சினிமா கேரியர், கார் ரேஸ், விஜய்யின் அரசியல் பயணம், உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் தற்போது தனக்கு நேர்ந்த மோசமான சம்பவம் குறித்தும் பேசியுள்ளார்.
அஜித் கையில் பிளேடு வைத்து வெட்டிய ரசிகர்:
அதாவது கடந்த 2005-ஆம் ஆண்டு, அஜித் பொது வெளியில் வந்த போது... அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவருக்கு கைகொடுத்துள்ளனர். அஜித்தும் அவர்களுக்கு கைகொடுத்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது ஒரு கொடூர ரசிகர் தன்னுடைய கையில் பிளேடு வைத்து அஜித்தின் கையில் வெட்டியுள்ளார். அஜித் காரில் ஏறிய பிறகு தான் தன்னுடைய கையில் ரத்தம் வருவதை கவனித்தாராம். இந்த சம்பவத்தை தன்னால் மறக்க முடியாது என அஜித் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.