எனக்கு முதல் திருமணத்தில் கிடைக்காத காதல் அப்போது கிடைத்தது; சரிகா குறித்து கமல் ஓபன் டாக்!
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பல விமர்சனங்களை எதிர்கொண்டார். அந்த வகையில் 1980களில் சரிகா உடன் இருந்த உறவு காரணமாக சர்ச்சையில் சிக்கினார்.
Kamalhaasan Sarika
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த நடிகர்களில் கமல்ஹாசனும் ஒருவர். நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட நடிகராகவும் வலம் வருகிறார். 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அவர் தற்போது இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பிசியான நடிகராக வலம் வருகிறார்.
Kamalhaasan Sarika
சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பல விமர்சனங்களை எதிர்கொண்டார். அந்த வகையில் 1980களில் சரிகா உடன் இருந்த உறவு காரணமாக சர்ச்சையில் சிக்கினார்.
ஏனெனில் கமல்ஹாசனும் சரிகாவும் காதலிக்க தொடங்கிய போது கமல்ஹாசன் ஏற்கனவே நடிகையும், கிளாசிக்கல் டான்சருமான வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். எனவே இறுதியில் வாணி கணபதியை விவாகரத்து செய்துவிட்டு, சரிகா உடன் சேர்ந்து வாழ தொடங்கினார்.
Kamalhaasan Sarika
இதுகுறித்து 2000 ஆம் ஆண்டு கமல்ஹாசனும் சரிகாவு அளித்த நேர்காணல் ஒன்றில் பேசி இருந்தனர். அப்போது பேசிய கமல் “ நான் அப்போது திருமணமான ஆணாக இருந்ததால் நானும் சரிகாவும் பலமுறை தங்கள் உறவை முறித்துக் கொள்ள முயன்றதாக தெரிவித்தார்
Kamalhaasan Sarika
ஆனால் முதல் திருமண வாழ்க்கை எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. குறைந்தபட்ச சந்தோஷத்தை கூட வழங்கவில்லை. மேலும் அது கடுமையானதாக மாறியது, நான் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினேன்.” என்று கமல் தெரிவித்தார்.
மேலும் “அந்த நேரத்தில் எனக்கு திருமணம் என்ற உறவின் மீது வேகமாக நம்பிக்கை இழந்து கொண்டிருந்தேன். திருமணமான முதல் நாளே எனக்கு இது வேண்டாம் கூறிவந்தேன்.
Kamalhaasan Sarika
அப்போது, சரிகா மற்றொரு பெண் என்று முத்திரை குத்தப்பட்டார், மேலும் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டார். சரிகா மிகவும் கவர்ச்சியான பெண் என்பதுதான் உண்மை. பின்னர், நாங்கள் நெருங்கி பழகிய போது, நாங்கள் அதிகமாக காதலிக்கிறோம் என்பதை புரிந்து கொண்டோம். எனக்கு கிடைக்காத அந்த காதல் அங்கு முடிவடைவதை நான் விரும்பவில்லை, அது நடக்க வேண்டும் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அது மிகவும் வேதனையாக இருந்தது." என்று கமல் கூறினார்.
Kamalhaasan Sarika
தங்களை சுற்றியுள்ள விஷயங்கள் மிகவும் மோசமாக இருந்தபோது தான் அவரைக் காதலிப்பதை உணர்ந்ததாக சரிகா பகிர்ந்து கொண்டார். மேலும் பேசிய அவர். "விஷயங்கள் மிகவும் மோசமாக இருந்தபோது நான் அவரை காதலிக்கிறேன் என்பதை உணர்ந்தேன், சில சமயங்களில் அவை எவ்வளவு மோசமாக இருந்தன என்பதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. இது வெறும் வேடிக்கையான நேரங்கள் அல்ல என்பதை அப்போது தான் உணர்ந்தேன்”என்று சரிகா கூறினார்.
Kamalhaasan Sarika
கமல்ஹாசனும் - சரிகாவும் லிவிங் டூ கெதரில் இருந்த நிலையில் 1988-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த பிறந்தவர்கள் தான் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன். திருமணத்திற்கு பிறகு சரிகாவும் கமல்ஹாசனின் பல படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றினார். குறிப்பாக ஹேராம் படத்திற்காக சிறந்த காஸ்ட்யூம் டிசைனருக்கான தேசிய விருதை சரிகா வென்றார். இதை தொடர்ந்து கமல்ஹாசன் - சரிகா தம்பதி 2004-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.