MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • OTT : ஹார்ட் பீட் 3 முதல் நூறு சாமி வரை... ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் ஆகப்போகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன?

OTT : ஹார்ட் பீட் 3 முதல் நூறு சாமி வரை... ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் ஆகப்போகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன?

This Week OTT Releases : ஹார்ட் பீட் சீசன் 3, நூறு சாமி உள்பட இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Jul 27 2026, 10:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
This Week OTT Releases
Image Credit : X

This Week OTT Releases

ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இல்லை. ஆக்‌ஷன், த்ரில்லர், குடும்பம், அனிமேஷன், ரியாலிட்டி ஷோ என பல்வேறு வகைகளில் புதிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாக உள்ளன. ஹாலிவுட்டின் 'தி டெவில் வேர்ஸ் ப்ராடா 2', தமிழ் படமான 'நூறு சாமி', மலையாள ஹிட் படமான 'பாலன் தி பாய்', 'சின்ன சின்ன ஆசை'. நடிகர் ஸ்ரீகாந்த் நடித்துள்ள 'அப்ஜெக்‌ஷன் மை லார்ட்' உள்ளிட்ட பல படைப்புகள் இந்த வார ஓடிடி வெளியீட்டில் இடம்பிடித்துள்ளன. அதன் பட்டியலை பார்க்கலாம்.

Jana Nayagan OTT: ஓடிடியில் எங்கு, எப்போது வெளியாகிறது 'ஜன நாயகன்'? ரசிகர்கள் காத்திருக்கும் அப்டேட்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்
Image Credit : X

ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்

ஹார்ட்பீட் சீசன் 3

தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற மருத்துவ பின்னணியிலான வெப் சீரிஸான 'ஹார்ட்பீட்'-இன் மூன்றாவது சீசன் ஜூலை 30 முதல் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. மருத்துவமனை சூழலில் நடைபெறும் இந்த கதைக்களம் புதிய திருப்பங்களுடன் இந்த சீசன் உருவாகியுள்ளது. இந்த வெப் சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

ராத் (Raath)

போர்ச்சுகீசிய மொழியில் உருவாகியுள்ள இந்த ஆக்‌ஷன் வெப் சீரிஸின் கதை, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் ஒரு இளைஞனை மையமாகக் கொண்டது. அவரை காப்பாற்றும் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளர், நினைவிழந்த அந்த இளைஞனுக்கு 'மார்செலோ' என்று பெயரிட்டு, எம்.எம்.ஏ உலகில் புதிய வாழ்க்கையை தொடங்க உதவுகிறார். ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் இந்த சீரிஸ் ஜூலை 29 முதல் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

தி டெவில் வேர்ஸ் ப்ராடா 2

ஆன் ஹாத்வே, மெரில் ஸ்ட்ரீப் மற்றும் எமிலி பிளன்ட் நடித்த ஹாலிவுட்டின் சூப்பர் ஹிட் திரைப்படமான 'தி டெவில் வேர்ஸ் ப்ராடா' படத்தின் இரண்டாம் பாகம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்த படம் ஜூலை 29 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது.

Jio Plan: ஏர்டெல்லை அலறவிடும் ஜியோ! அன்லிமிடெட் இன்டர்நெட் + இலவச OTT ஆப்ஸ்.. ஃப்ரீடம் பிளான்!

Related Articles

Related image1
Jana Nayagan OTT: ஓடிடியில் எங்கு, எப்போது வெளியாகிறது 'ஜன நாயகன்'? ரசிகர்கள் காத்திருக்கும் அப்டேட்
Related image2
Jio Plan: ஏர்டெல்லை அலறவிடும் ஜியோ! அன்லிமிடெட் இன்டர்நெட் + இலவச OTT ஆப்ஸ்.. ஃப்ரீடம் பிளான்!
34
இந்த வார ஓடிடி வெளியீடுகள்
Image Credit : Asianet News

இந்த வார ஓடிடி வெளியீடுகள்

நூறு சாமி

விஜய் ஆண்டனி மற்றும் சுவாசிகா நடித்துள்ள குடும்பக் கதையை மையமாகக் கொண்ட 'நூறு சாமி' திரைப்படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது ஜூலை 31 முதல் ஜீ5 தளத்தில் வெளியாகிறது.

பேட்மேன்: கேப்டு குரூசேடர் – சீசன் 2

கோதம் நகரில் புதிய வில்லன்களை எதிர்கொண்டு மக்களை காப்பாற்றும் பேட்மேனின் சாகசங்களே இந்த அனிமேஷன் தொடரின் மையக்கதை. இரண்டாவது சீசன் ஜூலை 31 முதல் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

தி லெஜண்ட் ஆஃப் கர்ணா

மகாபாரதத்தின் புகழ்பெற்ற வீரரான கர்ணனின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அனிமேஷன் சீரிஸ் இது. சாதாரண வாழ்க்கையில் இருந்து ஹஸ்தினாபுரத்தின் சிறந்த வீரராக உயர்ந்த கர்ணனின் கதையை இந்த தொடர் சித்தரிக்கிறது. ஜூலை 31 முதல் சோனி லிவ் ஓடிடியில் வெளியாகிறது.

பாலன் தி பாய்

மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படமான 'பாலன் தி பாய்', ஜூலை 31 முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது.

அப்ஜெக்‌ஷன் மை லார்ட்

ஸ்ரீகாந்த் மேகா, பரசுராம் மற்றும் முகேஷ் ரிஷி நடித்துள்ள இந்த தெலுங்கு கோர்ட்ரூம் டிராமா சீரிஸில், தனது காணாமல் போன மகளுக்காக நீதி கேட்டு போராடிய தந்தையின் மரணத்திற்குப் பிறகு, அந்த வழக்கை ஒரு வழக்கறிஞர் எப்படி முன்னெடுத்து செல்கிறார் என்பதே கதையாக அமைந்துள்ளது. இந்த சீரிஸும் ஜூலை 31 முதல் ஜீ5-ல் வெளியாகிறது.

OTT-யில் தூள் கிளப்பும் தமிழ் படம்... இந்த படத்தைப் பார்த்த பிறகு, நீங்க ஹோட்டல்ல தங்கவே பயப்படுவீங்க..!

44
ஓடிடியில் என்ன ஸ்பெஷல்?
Image Credit : video

ஓடிடியில் என்ன ஸ்பெஷல்?

சின்ன சின்ன ஆசை

மது மற்றும் இந்திரன்ஸ் நடித்துள்ள தமிழ்-மலையாள குடும்பத் திரைப்படமான 'சின்ன சின்ன ஆசை', ஜூலை 28 முதல் ஓடிடியில் வெளியாகிறது.

கத்ரோன் கே கிலாடி – சீசன் 15

பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி தொகுத்து வழங்கும் சாகச ரியாலிட்டி ஷோ 'கத்ரோன் கே கிலாடி'-யின் 15வது சீசன் ஆகஸ்ட் 1 முதல் ஒளிபரப்பாகிறது.

போஜ்புரி பவால்

பவன் சிங், தினேஷ் லால் யாதவ் உள்ளிட்ட போஜ்புரி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கும் 'போஜ்புரி பவால்' ரியாலிட்டி ஷோ ஆகஸ்ட் 2 முதல் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.

OTT : தமிழில் இப்படியொரு அடிபொலியான வெப் சீரிஸா? போலீஸ் vs சைக்கோ கில்லர்... ஒரு நிமிஷம் கூட போரடிக்காது!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : அருணை அடித்து நொறுக்கிய முத்து... மனோஜின் அடுக்கடுக்கான பொய்கள் அம்பலமாகுமா?
Recommended image2
Dhanush: விருதை விட தனுஷின் பதில்தான் இப்போது டிரெண்டிங்... என்ன சொன்னார் தெரியுமா?
Recommended image3
Jana Nayagan Day 4 Box Office : பாக்ஸ் ஆபிஸில் எந்த ஹீரோவும் கிட்ட கூட நெருங்கமுடியாத சாதனையை படைத்த விஜய்
Related Stories
Recommended image1
Jana Nayagan OTT: ஓடிடியில் எங்கு, எப்போது வெளியாகிறது 'ஜன நாயகன்'? ரசிகர்கள் காத்திருக்கும் அப்டேட்
Recommended image2
Jio Plan: ஏர்டெல்லை அலறவிடும் ஜியோ! அன்லிமிடெட் இன்டர்நெட் + இலவச OTT ஆப்ஸ்.. ஃப்ரீடம் பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved