MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • OTT : தமிழில் இப்படியொரு அடிபொலியான வெப் சீரிஸா? போலீஸ் vs சைக்கோ கில்லர்... ஒரு நிமிஷம் கூட போரடிக்காது!

OTT : தமிழில் இப்படியொரு அடிபொலியான வெப் சீரிஸா? போலீஸ் vs சைக்கோ கில்லர்... ஒரு நிமிஷம் கூட போரடிக்காது!

Must Watch Tamil Web Series : தமிழில் ஏராளமான வெப் சீரிஸ் வெளிவந்த வண்ண உள்ளன. அதில் மிகவும் அண்டர்ரேட்டடு ஆன ஒரு வெப் சீரிஸ் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jul 17 2026, 09:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Must Watch Tamil Web Series Review
Image Credit : X

Must Watch Tamil Web Series Review

OTT தளங்களில் தினமும் புதிய படங்களும், வெப் சீரிஸ்களும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. காதல், குடும்பம், ஆக்ஷன், காமெடி, ஹாரர் என பல வகை கதைகள் இருந்தாலும், சமீப காலமாக க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ்கள்தான் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகின்றன. காரணம், ஒவ்வொரு எபிசோடிலும் வரும் எதிர்பாராத திருப்பங்களும், கடைசி வரை சஸ்பென்ஸை தக்க வைத்திருக்கும் திரைக்கதையும்தான். அந்த வகையில், த்ரில்லர் ரசிகர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய ஒரு தமிழ் வெப் சீரிஸ் பற்றி தான் இங்கே பார்க்க உள்ளோம்.

Arulvaan Review : அடிபொலியாக இருந்ததா அருள்நிதியின் அருள்வான்? முழு விமர்சனம் இதோ

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வெப் சீரிஸ் கதைக்களம்
Image Credit : X

வெப் சீரிஸ் கதைக்களம்

அந்த வெப் சீரிஸ் பெயர் இரு துருவம். அதன் மையக் கதையாக இருப்பவர் போலீஸ் அதிகாரி விக்டர் செல்லதுரை. நேர்மையும் துணிச்சலும் கொண்ட அதிகாரியான அவரின் வாழ்க்கை, அவரது மனைவி திடீரென மாயமான பிறகு முற்றிலும் மாறிவிடுகிறது. அதே நேரத்தில் நகரின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கொடூரமான கொலைகள் நடக்கத் தொடங்குகின்றன. ஒவ்வொரு கொலையையும் செய்த பிறகும், குற்றவாளி ஒரு மர்மமான துப்பை விட்டுச் செல்வதால், போலீசாருக்கு இது ஒரு சவாலாக மாறுகிறது. அனைத்து ஆதாரங்களும் ஒரே நபரை நோக்கிச் சுட்டிக்காட்ட, இது ஒரு சைக்கோ கொலையாளியின் வேலை என்ற முடிவுக்கு விசாரணை அதிகாரிகள் வருகிறார்கள்.

Anbe Diana Review : அன்பே டயானா படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம்

Related Articles

Related image1
OTT-யில் தூள் கிளப்பும் தமிழ் படம்... இந்த படத்தைப் பார்த்த பிறகு, நீங்க ஹோட்டல்ல தங்கவே பயப்படுவீங்க..!
Related image2
Theatre and OTT Releases : அன்பே டயானா முதல் அருள்வான் வரை... ஜூலை 17ல் தியேட்டர் & ஓடிடியில் செம ட்ரீட் வெயிட்டிங்
35
இறுதிவரை ட்விஸ்ட்
Image Credit : X

இறுதிவரை ட்விஸ்ட்

இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு விக்டர் செல்லதுரைக்கு வழங்கப்படுகிறது. ஆனால், அவரின் ஒவ்வொரு நகர்வையும் முன்கூட்டியே கணிக்கும் அந்த மர்ம கொலையாளி, போலீசாரை தவறான பாதையில் இழுத்துச் செல்ல பல புத்திசாலித்தனமான திட்டங்களை தீட்டுகிறான். இதனால், விசாரணை மேலும் சிக்கலாக மாறுகிறது. உண்மையில் அந்த சைக்கோ கொலையாளி யார்? அவன் தொடர்ந்து கொலை செய்ய என்ன காரணம்? அவரது கடந்த காலத்தில் என்ன நடந்தது? காணாமல் போன விக்டரின் மனைவிக்கு என்ன ஆனது? இறுதியில் குற்றவாளியை போலீசார் எப்படி பிடிக்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கான பதில்கள்தான் இந்த தொடரின் விறுவிறுப்பான திரைக்கதையாக அமைந்துள்ளது.

45
இரு துருவம் வெப் சீரிஸ் டீம்
Image Credit : X

இரு துருவம் வெப் சீரிஸ் டீம்

இயக்குநர் எம். குமரன் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸை, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் A Sign of Life Productions நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதில் நந்தா துரைராஜ், பிரசன்னா, அப்துல், செபாஸ்டியன் ஆண்டனி, அபிராமி வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மொத்தம் 9 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ், தொடக்கம் முதல் முடிவு வரை எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படாமல், பரபரப்பான திரைக்கதையுடன் நகர்கிறது. க்ரைம் த்ரில்லர் கதைகளை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த OTT தேர்வாக இருக்கும்.

55
எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
Image Credit : X

எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

'இரு துருவம்' வெப் சீரிஸ் தற்போது சோனி லிவ் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. இந்த வெப் சீரிஸ் கடந்த 2019-ம் ஆண்டே ரிலீஸ் ஆகிவிட்டது. ஓடிடி தளங்கள் கொரோனா ஊரடங்கு சமயத்தில் தான் பேமஸ் ஆனதால், இந்த அற்புதமான தமிழ் திரில்லர் வெப் சீரிஸ் பெரியளவில் ரீச் ஆகவில்லை. இருப்பினும் அதனை தற்போது பார்க்கும் பலர் தமிழில் இப்படி ஒரு வெப் சீரிஸா என வியந்து பாராட்டி வருகின்றனர். இந்த வெப் சீரிஸின் இரண்டாம் பாகமும் ரிலீஸ் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
The Odyssey Review : கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ பிளாஸ்டா? வேஸ்டா? விமர்சனம் இதோ
Recommended image2
லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அடிதூள் அப்டேட்..!
Recommended image3
Serial : சன் டிவி எடுத்த அதிரடி முடிவு... தொடங்கிய வேகத்தில் இழுத்து மூடப்படும் புத்தம் புது சீரியல்..!
Related Stories
Recommended image1
OTT-யில் தூள் கிளப்பும் தமிழ் படம்... இந்த படத்தைப் பார்த்த பிறகு, நீங்க ஹோட்டல்ல தங்கவே பயப்படுவீங்க..!
Recommended image2
Theatre and OTT Releases : அன்பே டயானா முதல் அருள்வான் வரை... ஜூலை 17ல் தியேட்டர் & ஓடிடியில் செம ட்ரீட் வெயிட்டிங்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved