MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • OTT-யில் தூள் கிளப்பும் தமிழ் படம்... இந்த படத்தைப் பார்த்த பிறகு, நீங்க ஹோட்டல்ல தங்கவே பயப்படுவீங்க..!

OTT-யில் தூள் கிளப்பும் தமிழ் படம்... இந்த படத்தைப் பார்த்த பிறகு, நீங்க ஹோட்டல்ல தங்கவே பயப்படுவீங்க..!

Must Watch Movie on OTT : நடிகர் ஜெய் நடிப்பில் தியேட்டரில் ரிலீஸ் ஆகி அட்டர் பிளாப் ஆன படமொன்று தற்போது இரண்டு ஓடிடி தளங்களில் சக்கைப்போடு போட்டு வருகிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 15 2026, 01:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
OTT Movie Review
Image Credit : X

OTT Movie Review

ஒவ்வொரு வாரமும் பல புதிய திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும் OTT தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு சத்தமின்றி வெளியான தமிழ் திரைப்படம் தற்போது ஓடிடியில் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரையரங்குகளில் பெரிய அளவில் கவனம் பெறாத அந்த திரைப்படம், OTT-யில் வெளியான பிறகு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. விறுவிறுப்பான திரைக்கதை, எதிர்பாராத ட்விஸ்டுகள் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளால் இந்தப் படம் தற்போது அதிகம் பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கதைக்களம் என்ன?
Image Credit : X

கதைக்களம் என்ன?

அனாதையாக வளர்ந்த இளைஞன், செல்வாக்கு மிக்க அரசியல்வாதியின் மகளை காதலிக்கிறான். ஆனால் அந்தப் பெண்ணின் தந்தை, அரசியல் லாபத்திற்காக தனது மகளை வயதில் மூத்த அரசியல்வாதி ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். இந்த சூழ்நிலையில், காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு நிம்மதியாக வாழ நினைக்கும் அவர்களின் வாழ்க்கை, எதிர்பாராத பிரச்சனைகளால் தலைகீழாக மாறுகிறது.

Related Articles

Related image1
Airtel Rs 200 Plan: ரூ.200 மட்டும் செலுத்தினால் போதும்.. அன்லிமிடெட் 5ஜி, 18+ OTT இலவசம்!
Related image2
Theatre and OTT Releases : அன்பே டயானா முதல் அருள்வான் வரை... ஜூலை 17ல் தியேட்டர் & ஓடிடியில் செம ட்ரீட் வெயிட்டிங்
34
எதிர்பாரா ட்விஸ்ட்
Image Credit : X

எதிர்பாரா ட்விஸ்ட்

ஒருபுறம், பெண்ணின் தந்தை அனுப்பிய ஆட்கள் அவர்களைத் தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்க, மறுபுறம் பண நெருக்கடியும் அவர்களை வாட்டுகிறது. இதிலிருந்து தப்பிக்க அவர்கள் ஒரு தனிமையான ரிசார்ட்டில் தங்க முடிவு செய்கிறார்கள். ஆனால் அந்த இடமே அவர்களுக்கு புதிய ஆபத்தை உருவாக்குகிறது. ரிசார்ட்டில் பணிபுரியும் ஒருவர், அங்கு தங்கும் தம்பதிகளின் படுக்கையறையில் ரகசியமாக கேமரா வைத்து வீடியோ பதிவு செய்து, டார்க் வெப் கும்பலுக்கு விற்பனை செய்து வருவது தெரியவருகிறது.

இதனால், ஹீரோவும், ஹீரோயினும் ஆபத்தான எதிரிகளின் வலையில் சிக்கிக்கொள்கிறது. ஒரு பக்கம் அரசியல்வாதியின் ரவுடி கும்பல், மறுபக்கம் டார்க் வெப் குற்றவாளிகள். இந்த இரட்டை அச்சுறுத்தலிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள்? தங்களின் காதலையும் உயிரையும் எப்படி காப்பாற்றுகிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

44
எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
Image Credit : X

எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

இப்படி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த படத்தின் பெயர் 'சட்டென்று மாறுது வானிலை'. இத்திரைப்படத்தை இயக்குநர் பாபு விஜய் இயக்கியுள்ளார். இதில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கலந்த இந்த திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஆஹா OTT தளங்களில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மொழியிலும் இந்தப் படம் கிடைக்கிறது. ட்விஸ்டு மேல் ட்விஸ்டுகள் நிறைந்த கதைகளையும், விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களையும் விரும்புபவர்களுக்கு 'சட்டென்று மாறுது வானிலை' ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha: சமந்தாவுக்கு சிம்பிளா நடந்து முடிந்த வளைகாப்பு... குழந்தை எப்போ பிறக்கப்போகுது தெரியுமா?
Recommended image2
Vedan : அனிருத் இசையில் பாடிய ராப்பர் வேடன்... லோகேஷ் கனகராஜ் படத்துக்காக இணையும் மாஸ் கூட்டணி!
Recommended image3
Jananayagan Release: எதிர்பார்த்ததை விட சீக்கிரமா வருது? 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதியில் ட்விஸ்ட்..!
Related Stories
Recommended image1
Airtel Rs 200 Plan: ரூ.200 மட்டும் செலுத்தினால் போதும்.. அன்லிமிடெட் 5ஜி, 18+ OTT இலவசம்!
Recommended image2
Theatre and OTT Releases : அன்பே டயானா முதல் அருள்வான் வரை... ஜூலை 17ல் தியேட்டர் & ஓடிடியில் செம ட்ரீட் வெயிட்டிங்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved