MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ramya Pandian : மீண்டும் மொட்டை மாடி போட்டோஷூட்... கிளாமர் குயினாக கம்பேக் கொடுத்த ரம்யா பாண்டியன்..!

Ramya Pandian : மீண்டும் மொட்டை மாடி போட்டோஷூட்... கிளாமர் குயினாக கம்பேக் கொடுத்த ரம்யா பாண்டியன்..!

Ramya Pandian Latest Photoshoot : நடிகை ரம்யா பாண்டியன், மொட்டை மாடியில், கருப்பு நிற சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்து எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 28 2026, 02:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Ramya Pandian Latest Photoshoot
Image Credit : instagram/actress_ramyapandian

Ramya Pandian Latest Photoshoot

நடிகை ரம்யா பாண்டியன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்து முடித்த கையோடு, சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின்னர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாக இருந்த ரா ரா ராஜசேகர் திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். சில காரணங்களால் அந்தப் படம் கைகூடாமால் போக, டம்மி டப்பாசு என்கிற சிறு பட்ஜெட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் ரம்யா பாண்டியன்.

OTT : ஹார்ட் பீட் 3 முதல் நூறு சாமி வரை... ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் ஆகப்போகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ரம்யா பாண்டியனின் திரைப்பயணம்
Image Credit : instagram/actress_ramyapandian

ரம்யா பாண்டியனின் திரைப்பயணம்

இதையடுத்து இயக்குநர் பாலாஜி சக்திவேல் பரிந்துரையின் பேரில் ரம்யா பாண்டியனுக்கு ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட ரம்யா, தன்னுள் இருக்கும் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி, பாராட்டுக்களையும் பெற்றார். இதையடுத்து ஆண் தேவதை என்கிற திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்தார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்த ரம்யாவுக்கு முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

Related Articles

Related image1
Ramya Pandian : பனியிலும் கொள்ளை அழகில் ரம்யா பாண்டியன் - லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
Related image2
ரம்யமான தோற்றத்தில் மனம் பறிக்கும் ரம்யா பாண்டியன்!
37
பாப்புலர் ஆக்கிய விஜய் டிவி ஷோக்கள்
Image Credit : instagram/actress_ramyapandian

பாப்புலர் ஆக்கிய விஜய் டிவி ஷோக்கள்

அந்த வாய்ப்பை பிடிப்பதற்காக அவர் தன் வீட்டு மொட்டை மாடியில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி, அதை சோசியல் மீடியாவில் பதிவிட, அது செம வைரலாகி ரம்யா பாண்டியனுக்கு புகழ் வெளிச்சம் கிடைத்தது. அந்த சமயத்தில் தான் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதில் போட்டியாளராக களமிறங்கிய ரம்யா, ஜஸ்ட் மிஸ்ஸில் டைட்டிலை நழுவவிட்டு 2ம் இடம் பிடித்தார். இதையடுத்து விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு, அதிலும் பைனல் வரை சென்றார்.

47
ரம்யாவின் காதல் திருமணம்
Image Credit : instagram/actress_ramyapandian

ரம்யாவின் காதல் திருமணம்

பிக் பாஸுக்கு பின்னர் பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்து காத்திருந்தார் ரம்யா, ஆனால் அந்த சமயத்தில் கொரோனா ஊரடங்கு போடப்பட்டு இருந்ததால், அவருக்கு பட வாய்ப்புகள் பெரியளவில் கிடைக்கவில்லை. பின்னர் யோகா டீச்சர் ஆக வேண்டும் என்கிற ஆசையில் அதற்காக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் யோகா பயின்றார் ரம்யா. அப்போது அவருக்கு யோகா சொல்லிக் கொடுத்த லொவெல் தவான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. 2024-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

57
பஞ்சாப்பில் செட்டில் ஆன ரம்யா
Image Credit : instagram/actress_ramyapandian

பஞ்சாப்பில் செட்டில் ஆன ரம்யா

ரம்யா பாண்டியனின் கணவர் பஞ்சாப்பை சேர்ந்தவர் என்பதால் கல்யாணத்துக்கு பின் பஞ்சாப்பில் செட்டில் ஆன ரம்யா, அவ்வப்போது ஷூட்டிங்கிற்காக தமிழ்நாட்டுக்கு வருகிறார். அண்மையில் அவர் நடித்த அருள்வான் திரைப்படம் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தில் ரம்யா பாண்டியன் உடன் அருள்நிதி, ஆரவ் ஆகியோரும் நடித்திருந்தனர்.

67
லேட்டஸ்ட் மொட்டைமாடி போட்டோஷூட்
Image Credit : instagram/actress_ramyapandian

லேட்டஸ்ட் மொட்டைமாடி போட்டோஷூட்

இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டைமாடி போடோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரம்யா. கருப்பு நிறை சேலையும், ஸ்லீவ் லெஸ் பிளெவுஸும் அணிந்து சற்று கிளாமராக அவர் நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

77
குவியும் லைக்ஸ்
Image Credit : instagram/actress_ramyapandian

குவியும் லைக்ஸ்

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ரம்யா பாண்டியன் பேக் டூ ஃபார்ம் என கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் அதிகளவில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
தமிழ் நடிகைகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mrunal Thakur : மீண்டும் காதல் சர்ச்சையில் மிருணாள் தாக்கூர்.... தன்னைவிட 9 வயது இளம் கிரிக்கெட் வீரருடன் காதலா?
Recommended image2
Trisha Kishnan: 44 வயதில் தான் வாழ்க்கை தொடங்குகிறது.! தனுஷ் பிறந்தநாளில் த்ரிஷா போட்ட பதிவு.!
Recommended image3
Rajamouli : ஒரு படத்துக்கு ராஜமௌலி வாங்கும் சம்பளம் எவ்வளவு? அடேங்கப்பா 'வாரணாசி'க்கு இத்தனை கோடியா?
Related Stories
Recommended image1
Ramya Pandian : பனியிலும் கொள்ளை அழகில் ரம்யா பாண்டியன் - லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
Recommended image2
ரம்யமான தோற்றத்தில் மனம் பறிக்கும் ரம்யா பாண்டியன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved