ஜெய் பீமுக்கு ஒரு விருதுகூட இல்லை! சைமா விருது விழாவில் புறக்கணிக்கப்பட்ட சூர்யா படம்- கொந்தளிக்கும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது சூர்யாவின் ஜெய் பீம் தான்.
தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றில் வெளியாகும் படங்களை அங்கீகரிக்கும் வகையில் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான சைமா விருது வழங்கும் விழா பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கான விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. இதில் கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி சக்கைப்போடு போட்ட டாக்டர், சார்பட்டா பரம்பரை, மாநாடு, மாஸ்டர் ஆகிய படங்கள் அதிகளவில் விருதுகளை வென்று குவித்தன. இருப்பினும் இதில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஓடிடி-யில் வெளியான ஜெய் பீம் படத்துக்கு ஒரு விருது கூட வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... மீண்டும் தாத்தா ஆனார் சூப்பர்ஸ்டார்... குழந்தை பிறந்த உடனே இரண்டே எழுத்தில் நச்சுனு பெயர் சூட்டிய சவுந்தர்யா
தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது ஜெய் பீம் தான். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருந்தார் டி.ஜே.ஞானவேல். இதில் நடிகர் சூர்யா பழங்குடியினருக்காக வாதாடும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தின் சூர்யாவின் நடிப்புக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்தது. ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் கூட இறுதிவரை முன்னேறி நூலிழையில் அந்த வாய்ப்பு பறிபோனது. அதுமட்டுமின்றி இப்படத்தில் கதாபாத்திரமாக வாழ்ந்திருந்த மணிகண்டன் மற்றும் லிஜோமோல் ஆகியோருக்கும் சைமா விருது விழாவில் ஒரு விருது கூட வழங்கப்படாததற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... ஒரிஜினல் பான் இந்தியா ஸ்டார்..! 'விக்ரம்' படத்திற்காக சைமா விருதை வென்ற உலக நாயகன் கமல்ஹாசன்..!