மீண்டும் தாத்தா ஆனார் சூப்பர்ஸ்டார்... குழந்தை பிறந்த உடனே இரண்டே எழுத்தில் நச்சுனு பெயர் சூட்டிய சவுந்தர்யா
soundarya rajinikanth : நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவரே டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சினிமாவில் இயக்குனராக பணியாற்றி உள்ளனர். இதில் ஐஸ்வர்யா கடந்த 2012-ம் ஆண்டு வெளியான தனுஷின் 3 படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இதன்பின்னர் வை ராஜா வை படத்தை இயக்கினார்.
அதேபோல் சவுந்தர்யா, கடந்த 2014-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான கோச்சடையான் படம் மூலம் இயக்குனராக எண்ட்ரி கொடுத்தார். அனிமேஷன் முறையில் இப்படத்தை படமாக்கி இருந்தார் சவுந்தர்யா, அவரின் முயற்சிக்கு பாராட்டுக்களும் குவிந்தன. இதையடுத்து தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார் சவுந்தர்யா.
இதையும் படியுங்கள்... ஐந்தாவது சீசனைவிட 20 கோடி அதிகம்! ‘பிக்பாஸ் 6’ நிகழ்ச்சிக்காக கமலுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இவர்கள் இருவருக்குமே முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதேபோல் கடந்த 2010- ஆண்டு அஸ்வின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட சவுந்தர்யா, கடந்த 2017-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களுக்கு வேத் என்ற ஆண்குழந்தையும் உள்ளது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் சவுந்தர்யா.
இந்நிலையில், தற்போது விசாகன் - சவுந்தர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் சவுந்தர்யா. அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : கடவுளின் அபரிமிதமான அருளுடனும், எங்கள் பெற்றோரின் ஆசியுடனும் விசாகன், வேத் மற்றும் நான் வேதின் சகோதரனை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என பதிவிட்டுள்ள சவுந்தர்யா, செப்டம்பர் 11-ந் தேதி பிறந்த தன் குழந்தைக்கு வீர் என பெயர் சூட்டி உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சவுந்தர்யா - விசாகன் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... மணிரத்னம் அழைத்தும் பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்த அமலா பால்... என்ன காரணம் தெரியுமா?