ஐந்தாவது சீசனைவிட 20 கோடி அதிகம்! ‘பிக்பாஸ் 6’ நிகழ்ச்சிக்காக கமலுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
BiggBoss Tamil 6: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்களை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல், விரைவில் தொடங்க உள்ள ஆறாவது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார்.
தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த ஐந்து சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தம் 100 நாட்கள் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் வார இறுதி நாட்களில் மட்டும் கமல்ஹாசன் கலந்துகொள்வார்.
ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் யார் என்பதை அறிவித்து அவர்களை வெளியியேற்றும் பொறுப்பு கமல்ஹாசன் உடையது. அதன்படி 5 சீசன்கள் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வந்த கமல், விரைவில் தொடங்க உள்ள ஆறாவது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சி வருகிற அக்டோபர் மாதம் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று தொடங்கப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்... அதிகம் சம்பாதிக்கும் மனைவி முன் கெத்து காட்டிய கணவர்! நீயா நானாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவத்தை பாராட்டிய நடிகை
இதில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் லீக் ஆகி ஒரு புறம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசன் வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு என்பது குறித்த விவரம் வெளியாகி பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனை தொகுத்து வழங்க ரூ.55 கோடி சம்பளமாக வாங்கிய கமல்ஹாசன் தற்போது 6-வது சீசனுக்காக தனது சம்பளத்தை 20 கோடி உயர்த்தி உள்ளார். அதன்படி இந்த சீசனில் அவர் பங்கேற்க உள்ள 15 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 75 கோடி சம்பளமாக வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படியுங்கள்... கைப்புள்ள முதல் நேசமணி வரை... சொன்ன உடனே குபீர் என சிரிப்பு வர வைக்கும் வடிவேலுவின் காமெடி கேரக்டர்கள் இதோ