MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கைப்புள்ள முதல் நேசமணி வரை... சொன்ன உடனே குபீர் என சிரிப்பு வர வைக்கும் வடிவேலுவின் காமெடி கேரக்டர்கள் இதோ

கைப்புள்ள முதல் நேசமணி வரை... சொன்ன உடனே குபீர் என சிரிப்பு வர வைக்கும் வடிவேலுவின் காமெடி கேரக்டர்கள் இதோ

vadivelu : திரைப்படங்களில் வடிவேலு நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த காமெடி கதாபாத்திரங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Sep 12 2022, 11:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த மாபெரும் நகைச்சுவை கலைஞர் ஆவார். ரஜினி, கமல் தொடங்கி சிம்பு, சூர்யா வரை பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து படங்களில் இவர் செய்த காமெடி காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றன. நகைச்சுவை மன்னனாக வலம் வரும் வடிவேலு இன்று தனது 62-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், திரைப்படங்களில் அவர் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த காமெடி கதாபாத்திரங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

27

கைப்புள்ள

சுந்தர் சி - வடிவேலு கூட்டணி சேர்ந்தாலே அந்த படம் ஹிட் தான் என சொல்லும் அளவுக்கு இவர்கள் காம்போவில் வெளிவந்த படங்களில் இடம்பெறும் காமெடி காட்சிகளுக்கென்று தனி மவுசு உண்டு. அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வின்னர் படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் கதாபாத்திரத்தின் பெயர் தான் கைப்புள்ள. உண்மையில் சொல்லப்போனால் இப்படத்தின் ஹீரோ வடிவேலு தான். பிரசாந்தை விட வடிவேலுவுக்கு தான் அதிக ஸ்கோப் கொடுத்திருப்பார் சுந்தர் சி.

37

நாய் சேகர்

சுந்தர் சி-யோடு வடிவேலும் நடிக்கும் காமெடி காட்சிகளும் பெரிய அளவில் ரசிக்கப்பட்டன. தலைநகரம் படத்தில் நாய் சேகர் என்ற கேரக்டரில் வந்து சுந்தர் சி-யோடு சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டி காமெடிக்கு கேரண்டி கொடுத்தன. இப்படத்தில் இவர் பேசும் வசனங்கள் அனைத்தும் இன்றளவும் மீம் கிரியேட்டர்களுக்கு தீனி போட்டு வருகின்றன.

47

நேசமணி

பாசில் இயக்கிய பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு நடித்த கதாபாத்திரத்தின் பெயர் தான் நேசமணி. இதில் காண்ட்ராக்டராக அவர் நடித்திருப்பார். சமீபத்தில் கூட #JusticeForNesamani என்கிற ஹேஷ்டேக் டுவிட்டரில் உலகளவில் டிரெண்டானது. இதில் விஜய், சூர்யாவோடு இணைந்து இவர் நடித்த காமெடி காட்சிகள் இன்றும் பார்த்த உடன் குபீர் சிரிப்பை வரவைக்கும்.

57

ஸ்நேக் பாபு

மாதவன், பாவனா நடிப்பில் வெளியான ஆர்யா படத்தில் ஸ்நேக் பாபுவாக நடித்திருப்பார் வடிவேலு. முதலில் பிச்சைக்காரனாக இருக்கும் இவர் பின்னர் அரசியல்வாதியாக மாறி காமெடியிலும் அதகளம் செய்திருப்பார். அதில் அவர் தனது பெயரை சொல்லும் ஸ்டைலும் வேறலெவலில் இருக்கும். வடிவேலு காமெடியால் ஓடிய படங்களில் இதுவும் ஒன்று.

67

பாடி சோடா

வடிவேலுவின் மற்றுமொரு மாஸ்டர் பீஸ் கேரக்டர் என்றால் அது போக்கிரி படத்தில் இடம்பெறும் பாடி சோடா கேரக்டர் தான். இதில் அவர் பேசும் ‘அந்த குரங்கு பொம்மை என்ன விலை’, ‘வா சுருதி’, ‘லொஜக் மொஜக் பஜக்’ ஆகிய வசனங்கள் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகின்றன. 

77

இதுதவிர சச்சின் படத்தில் அவர் நடித்த ஐய்யாச்சாமி, இம்சை அரசன் 23-ம் புலிகேசி, கிரி படத்தில் வரும் வீரபாகு கேரக்டர், மருதமலையில் இடம்பெற்ற என்கவுண்டர் ஏகாம்பரம் கதாபாத்திரம், அரசு படத்தில் அவர் நடித்து பிச்சுமணி, சந்திரமுகியில் முருகேசன் மற்றும் வண்டுமுருகன், படித்துரை பாண்டி, அலர்ட் ஆறுமுகம் என வடிவேலுவின் பேமஸ் கேரக்டர்கள் ஏராளம் உள்ளன. 

இதையும் படியுங்கள்... மன அழுத்தத்தை போக்கும் மாமருந்து ‘வடிவேலு’... வைகைப்புயலின் பிறந்தநாளுக்கு கடல்போல் குவியும் வாழ்த்து

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வடிவேலு

Latest Videos
Recommended Stories
Recommended image1
யோகி பாபுவின் புதிய காமெடி டிராமா! ரவி மோகன் ஸ்டுடியோஸின் 'An Ordinary Man; தயாரிப்பாளரான கெனிஷா!
Recommended image2
தங்கமயிலின் விஸ்வரூபம்! பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க துடித்த அம்மா பாக்கியத்திற்கு கொடுத்த மரண அடி!
Recommended image3
கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்: திருடி பட்டம் கட்டிய ஊர் மக்கள்.. மருமகனை போட்டுத்தள்ள துணிந்த மாமியார்; நகை கிடைத்ததா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved