Neeya Naana : நீயா நானா நிகழ்ச்சியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவத்தை குறிப்பிட்டு, ஒரு அப்பா என்னைக்குமே தோற்கமுடியாது என நடிகை பிரியா பவானி சங்கர் பதிவிட்டுள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பேமஸான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று நீயா நானா. விவாத நிகழ்ச்சியான இதனை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் ஒரு டாப்பிக் எடுத்து அதுகுறித்து விவாதிக்கப்படும். அந்த வகையில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவிகளும் அவர்களது கணவன்களுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது.

அப்போது அதில் பங்கேற்ற பெண் ஒருவர், தனது குழந்தையின் ரேங்க் கார்டை தனது கணவர் ஒரு மணிரேமாக பார்த்து அதன்பின்னர் தான் கையெழுத்து போடுவார் என்றும், அவருக்கு social science-னாலே என்னனு தெரியாது அதையும் நாங்கள் தான் படிச்சு காட்டனும் என அவரை இழிவு படுத்தும் விதமாக பேசினார். இது அங்கிருந்தவர்களுக்கே சற்று முகசுழிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஏன் ஒரு மணிநேரம் ரேங்க் கார்டை பார்க்கிறீர்கள் என கோபிநாத் கேட்க, அதற்கு பதிலளித்த அந்த பெண்ணின் கணவர், தான் படிக்கும்போது 10-க்கு மேல் எதிலும் மார்க் எடுத்ததில்லை என்றும், தனது மகள் ஒவ்வொரு பாடத்திலும் 80, 90 என எடுத்துள்ளதை பார்க்கும் போது, என்னால் செய்யமுடியாததை என் மகள் செய்கிறாள் என்கிற சந்தோஷம் ஏற்படுவதாக அவர் கூறினார். 

இதையும் படியுங்கள்... பிகினி பேபியாக மாறிய ஸ்ரேயா... கடற்கரை மண்ணில் உருண்டு... பிரண்டு... குழந்தையுடன் கொண்டாடிய பிறந்தநாள்!

அப்பா.. ❤️ | Neeya Naana

இதற்கு அந்த பெண், அவர் ஒரு மணிநேரம் உட்கார்ந்து ABCD படிச்சுகிட்டு இருப்பாரு சார் என சிரித்தபடி சொன்னதைக் கேட்டு கோபமடைந்த கோபிநாத், வழக்கமாக நிகழ்ச்சியின் நிறைவில் அளிக்கப்படும் பரிசை உடனடியாக கொண்டுவரச்சொல்லி, அந்த பெண்ணின் கணவருக்கு கொடுத்து, தான் விட்டதை தனது மகள் புடித்துவிட்டால் என்கிற ஆனந்தத்தில் மகளின் ரேங்க் கார்டை ஒரு மணிநேரம் பார்க்கும் அந்த தந்தை தனக்கு காவியமாக தெரிகிறார் என நெகிழ்ச்சியுடன் பேசினார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆனது.

இதைப்பர்த்த நடிகை பிரியா பவானி சங்கர், அந்த தந்தையின் வெற்றியை அங்கீகரித்த கோபிநாத்துக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ஒருத்தர இகழ்ந்து அதை நகைச்சுவைன்னு நினைச்சு சிரிக்கறது ஒரு விதமான மனநோய். உங்க பார்வையும் பேச்சும் திருப்தியா இருந்துச்சு கோபி அண்ணா. வெற்றிக்கு இங்க ஆயிரம் இலக்கணம் வச்சிருக்காங்க. ஆனா ஒரு அப்பா என்னைக்குமே தோற்கமுடியாது! அவரது வெற்றிய அங்கீகரிச்சதுக்கு வாழ்த்துகள் கோபிநாத்” என குறிப்பிட்டிருந்தார்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... சூர்யா - பாலா கூட்டணியில் முடங்கிக் கிடக்கும் வணங்கான் படத்தின் மாஸான அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்