சூர்யா - பாலா கூட்டணியில் முடங்கிக் கிடக்கும் வணங்கான் படத்தின் மாஸான அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்
vanangaan : பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த வணங்கான் திரைப்படம் நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த நிலையில், அப்படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
நடிகர் சூர்யாவுக்கு திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்திய டைரக்டர் என்றால் அது பாலா தான். அவர் இயக்கத்தில் வெளியான நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்த பின்னர் தான் சூர்யாவின் கெரியர் அசுர வளர்ச்சி கண்டது. பிதாமகன் படத்துக்கு பின்னர் இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்த இவர்கள் சுமார் 19 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்துள்ளனர்.
இவர்கள் கூட்டணியில் வணங்கான் என்கிற திரைப்படம் உருவாக உள்ளதாக கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங்கை கன்னியாகுமரியில் நடத்தினர். ஒரு மாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் சூர்யா - பாலா இடையே நடந்த மோதல் தான் என கூறப்பட்டு வந்தது.
இதையும் படியுங்கள்... மகாலட்சுமியுடன் தனி விமானத்தில் ஹனிமூன் சென்றாரா ரவீந்தர்?... போட்டோ போட்டு அவரே சொன்ன விளக்கம் இதோ
பின்னர் பாலாவுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து சர்ச்சைகளுக்கு சூர்யா முற்றுப்புள்ளி வைத்தாலும், ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்பட்ட ஷூட்டிங் தற்போது வரை மீண்டும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையே நடிகர் சூர்யா, தனது அடுத்தபடத்தில் நடிக்க சென்றதால், வணங்கான் படம் என்ன ஆனது என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப்போய் இருந்தனர்.
இந்நிலையில், வணங்கான் படத்தின் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் அப்படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதன்படி வணங்கான் படத்தின் பாடல் பதிவு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அவர் கூறி உள்ளார். அவர் தந்த இந்த அப்டேட் சூர்யா ரசிகர்களுக்கு புத்துயிர் கொடுத்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... கைப்புள்ள முதல் நேசமணி வரை... சொன்ன உடனே குபீர் என சிரிப்பு வர வைக்கும் வடிவேலுவின் காமெடி கேரக்டர்கள் இதோ