ஒரிஜினல் பான் இந்தியா ஸ்டார்..! 'விக்ரம்' படத்திற்காக சைமா விருதை வென்ற உலக நாயகன் கமல்ஹாசன்..!

2022 ஆம் ஆண்டிற்கான ஒரிஜினல் பான் இந்தியா ஸ்டாருக்கான சைமா விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 

original pan india star award got ulaganayagan kamalhassan for vikram movie

திரையுலகினருக்கு வழங்கப்படும், 2022 ஆம் ஆண்டிற்கான SIIMA விருதுகள் வழங்கும் விழா பெங்களூரில் நடந்து வருகிறது. செப்டம்பர் 10  மற்றும் 11 ஆம் தேதி என இரு நாட்கள் நடைபெற்று வரும் இந்த விழாவில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய தென்னிந்திய திரையுலகை சேர்ந்த அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.

original pan india star award got ulaganayagan kamalhassan for vikram movie

குறிப்பாக கே.ஜி.எஃப் பட நடிகர் யஷ், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகர் கமல்ஹாசன், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். சிறந்த இயக்குனர்கள், சிறந்த திரைப்படம், ஸ்ரீகாந்தை நடிகர் என பல்வேறு பட்டியலில் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான ஒரிஜினல் பான் இந்தியா ஸ்டாருக்கான சைமா விருது வழங்கப்பட்டுள்ளது.

original pan india star award got ulaganayagan kamalhassan for vikram movie

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து தயாரித்திருந்த இந்த திரைப்படம்... ஓடிடி தளத்தில் அதிகாரபூர்வமாக வெளியான பின்னரும், வெற்றிகரமாக 100 நாட்களை கடந்து ஓடி வருகிறது. அனைத்து மொழி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் இந்த படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு தான், கமல்ஹாசனுக்கு இந்த விருதை பெற்று தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios