- Home
- Cinema
- இதுவும் போச்சா... வாரிவிட்ட சர்காரு வாரி பாட்டா -பிளாப் நாயகியான கீர்த்தி சுரேஷ்! திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்
இதுவும் போச்சா... வாரிவிட்ட சர்காரு வாரி பாட்டா -பிளாப் நாயகியான கீர்த்தி சுரேஷ்! திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்
Keerthy Suresh : மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான சர்காரு வாரி பாட்டா திரைப்படம் மோசமான திரைக்கதையால் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

அல்லு அர்ஜுனின் புஷ்பா மற்றும் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படங்களின் வெற்றிக்கு பின்னர் தெலுங்கு படங்களுக்கு இந்தியா முழுவதிலும் எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் பரசுராம் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி இருந்த படம் சர்காரு வாரி பாட்டா.
இப்படத்தில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை. தமன் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் ரிலீசுக்கு முன்பே வெளியாகி அமோக வரவேற்பை பெற்றதால், படத்தின் மீதான எதிர்பர்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்த வண்ணம் இருந்தது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான இப்படம் மோசமான திரைக்கதையால் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இது இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் ஹீரோயினாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரமும் மிகவும் மோசமாக அமைக்கப்பட்டு உள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
நடிகை கீர்த்தி சுரேஷ் கடைசியாக நடித்த 8 படங்கள் ஃபிளாப் ஆன நிலையில், இப்படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பிவிடலாம் என மலைபோல் நம்பி இருந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் அவரது எதிர்பார்ப்பெல்லாம் வீணாகிப் போனது. இப்படமும் நெகடிவ் விமர்சனங்களை சந்தித்து வருவதால், இதுவும் கிட்டத்தட்ட ஃபிளாப் ஆவது உறுதி என்றே கூறப்படுகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் வரிசையாக தோல்வியை சந்தித்து வருவதால், அவரை ஃபிளாப் நாயகி என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அவரை விமர்சிக்கும் விதமாக மீம்ஸ்களும் போடப்பட்டு வருகின்றன. இதனால் நடிகை கீர்த்தி சுரேஷின் மார்க்கெட்டும் சரியத் தொடங்கி உள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதையும் படியுங்கள்... அட்லீயின் சிஷியன் என நிரூபித்த சிபி... 2 படங்களின் தாக்கத்துடன் கூடிய ‘டான்’ எப்படி இருக்கு? - முழு விமர்சனம்