அப்போ பும்ரா.... இப்போ யாரு? நிச்சயதார்த்தம் ஆனதாக அறிவித்த அனுபமா பரமேஸ்வரன் - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன், தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக குறிப்பிட்டு போட்ட பதிவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தின் வெற்றிக்கு பின்னர் அனுபமாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் அறிமுகமான அனுபமா, பின்னர் டோலிவுட்டுக்கு சென்றார்.
அங்கு அனுபமாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்ததால், தற்போது டோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முதலில் ஹோம்லி வேடங்களில் மட்டும் நடித்து வந்த அனுபமா, டோலிவுட்டுக்கு சென்றதும் கிளாமர் தூக்கலாக நடிக்கத் தொடங்கி உள்ளார். குறிப்பாக லிப்லாக் காட்சிகளில் அசால்டாக நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.
இதையும் படியுங்கள்... ரெட் ஜெயண்ட் வெளியிட்டும் இந்த நிலைமையா.. பாக்ஸ் ஆபிஸில் பிக்-அப் ஆகாத கழுவேத்தி மூர்க்கன் - வசூல் நிலவரம் இதோ
இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் காதல் சர்ச்சைகளிலும் சிக்கியதுண்டு. அந்த வகையில், கிரிக்கெட் வீரர் பும்ராவை அனுபமா காதலிப்பதாக சர்ச்சை எழுந்தது. ஒரு கட்டத்தில் பும்ரா இவரைத் தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்கிற அளவுக்கு இவர்கள் இருவருக்கும் இடையிலான காதல் வதந்திகள் பூதாகரமானது. பின்னர் தனது காதலி சஞ்சனாவை பும்ரா திருமணம் செய்துகொண்ட பின்னர் தான் அனுபமாவின் காதல் சர்ச்சை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், தற்போது தனக்கு திருமணம் நிச்சயமாகி விட்டதாக குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் அனுபமா பதிவிட்டுள்ள புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். கையில் பிளாஸ்டிக் கவரை மோதிரம் போல் செய்து அணிந்துகொண்டு, தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக அனுபமா பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், உங்களுக்கு இதே வேலையா போச்சு, அப்போ பும்ரா.. இப்போ யாரு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... 50 வயதாகும் மணிரத்னம் பட நடிகை முன் படுக்கையறைவில் நிர்வாணமாக போஸ் கொடுத்த போனி கபூர் மகன்! போட்டோவால் சர்ச்சை