ரெட் ஜெயண்ட் வெளியிட்டும் இந்த நிலைமையா.. பாக்ஸ் ஆபிஸில் பிக்-அப் ஆகாத கழுவேத்தி மூர்க்கன் - வசூல் நிலவரம் இதோ
கெளதம ராஜ் இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடித்துள்ள கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் கம்மியான வசூலை மட்டுமே பெற்றுள்ளது.
கலைஞரின் பேரனான அருள்நிதி, தமிழ் திரையுலகில் படிப்படியாக வளர்ந்து வருகிறார். தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி, தற்போது கழுவேத்தி மூர்க்கன் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கெளதம ராஜ் இயக்க, டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். கிராமத்து கதையம்சம் கொண்ட இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.
கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வெளியிட்டது. தமிழகத்தில் சுமார் 310 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அருள்நிதி நடித்த படங்களில் அதிகளவிலான திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படமாகவும் இது இருந்தது. இதனால் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நன்கு வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... 50 வயதாகும் மணிரத்னம் பட நடிகை முன் படுக்கையறைவில் நிர்வாணமாக போஸ் கொடுத்த போனி கபூர் மகன்! போட்டோவால் சர்ச்சை
ஆனால் விமர்சன ரீதியாக இப்படம் சறுக்கலை சந்தித்ததால், பாக்ஸ் ஆபிஸிலும் பிக்-அப் ஆகவில்லை. அதன்படி கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ.1.5 கோடி மட்டுமே வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதிகளவிலான திரையரங்குகளில் வெளியாகியும் இப்படத்திற்கு பெரியளவில் வரவேற்பு இல்லாததால், நாளுக்கு நாள் வசூல் குறைந்த வண்ணமே உள்ளது.
இன்று வேலை நாள் என்பதால் கடந்த மூன்று நாட்களைவிட இன்றைய வசூல் மிகவும் குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது. அடுத்த வாரமும் ஆர்யா நடித்த காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம், ஹிப்ஹாப் ஆதி நடித்த வீரன் என இரு படங்கள் ரிலீஸ் ஆவதால், கழுவேத்தி மூர்க்கன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு அப்படங்களால் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... 23 வயது கவர்ச்சி நடிகையுடன் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் காதல்?.. கிஸ் அடித்த போட்டோ வெளியானதால் ரசிகர்கள் ஷாக்