23 வயது கவர்ச்சி நடிகையுடன் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் காதல்?.. கிஸ் அடித்த போட்டோ வெளியானதால் ரசிகர்கள் ஷாக்
நடிகை ஷாலினியின் சகோதரரும், நடிகர் அஜித்தின் மச்சானுமான ரிச்சர்ட் ரிஷிக்கு கவர்ச்சி நடிகை ஒருவர் முத்தம் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி. இவர் அஜித்தை திருமணம் செய்த பின்னர் சினிமாவை விட்டு விலகினார். நடிகை ஷாலினிக்கு ஷாமிலி என்கிற தங்கையும், ரிச்சர்ட் ரிஷி என்கிற சகோதரரும் உள்ளனர். இவர்கள் இருவரும் சினிமாவில் நடித்துள்ளனர். ஷாலினியின் தங்கை ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ஹீரோயினாக நடித்த ஒரே திரைப்படம் வீர சிவாஜி. இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷாமிலி.
அதேபோல் ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷியும் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். இவரும் சிறுவயதில் இருந்தே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து வந்தாலும், இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது திரெளபதி தான். மோகன் ஜி இயக்கிய இப்படம் கடந்த 2020-ம் ஆண்டு வெளியாகி அதிரி புதிரியான வெற்றியை பதிவு செய்தது.
இதையும் படியுங்கள்... சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்ற மாதவன்! குவியும் வாழ்த்து...
இதையடுத்து மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார் ரிச்சர்ட். இப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி பதிவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளன. அதன்படி நடிகர் ரிச்சர்ட் ரிஷி தனக்கு யாஷிகா ஆனந்த் முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு அடுத்ததாக முத்தத்திற்கு பின் எடுத்தது என குறிப்பிட்டு இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார் ரிச்சர்ட். இப்படி அடுத்தடுத்து யாஷிகா உடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளதால், இவர்கள் இருவரும் உண்மையிலேயே காதலிக்கிறார்களா அல்லது படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்களா என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர். இதுகுறித்து அவர்கள் இருவரும் விளக்கம் அளித்தால் தான் இந்த காதல் சர்ச்சை முடிவுக்கு வரும். நடிகை யாஷிகாவுக்கு தற்போது 23 வயது ஆகிறது. அதேபோல் நடிகர் ரிச்சர்ட் ரிஷிக்கு தற்போது 45 வயதாகிறது. 45 வயதாகியும் ரிச்சர்ட் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... 50 வயதை நெருங்கும் ஐஸ்வர்யா ராய் முகத்தில் இவ்வளவு சுருக்கமா? ஷாக்கிங் கிளோஸ் அப் போட்டோ!