50 வயதை நெருங்கும் ஐஸ்வர்யா ராய் முகத்தில் இவ்வளவு சுருக்கமா? ஷாக்கிங் கிளோஸ் அப் போட்டோ!
நடிகை ஐஸ்வர்யா ராய், 50 வயதை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் இவருடைய கிளோஸ் அப் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பாலிவுட் திரையுலகின், குயின் என கொண்டாடப்படும் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை கைப்பற்றிய பின்னர், 1997ல் மணிரத்னம் இயக்கிய 'இருவர்' படத்தின் மூலம் கதாநாயகியாக தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர். இதை தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த துவங்கினார்.
'அவுர் பியார் ஹோகயா' என்கிற படத்தின் மூலம், அறிமுகமாகி... பின்னர் தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கினார். முன்னணி நடிகையாக இருந்த போது , சில டாப் நடிகர்களுடன் காதல் சர்ச்சியிலும் சிக்கியவர் ஐஸ்வர்யா ராய். பின்னர், குரு படத்தில், அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதல் திருமணத்திலும் முடியவே, தற்போது இவர்களின் காதலுக்கு அடையாளமாக ஆரத்தியா என்கிற மகள் ஒருவரும் உள்ளார்.
திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும்... உலகளவில் தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராய், தன்னுடைய மனதுக்கு நெருக்கமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், ஐஸ்வர்யா ராய்... இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் 2 பாகங்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
ஐஸ்வர்யா ராய்யின் நந்தினி கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. திரையுலகில் உள்ளார் 25 ஆண்டுகளுக்கு மேல், தன்னிகரற்ற ஹீரோயினாக இருக்கும் ஐஸ்வர்யா ராய், எப்போது புகைப்படங்களில் பார்த்தாலும், பிரெஷ்ஷாக செடியில் பூத்த, ரோஜா மலர் போல் காட்சியளிப்பார்.
விஸ்வாசம் நயன்தாரா கெட்டப்பில் பிக்பாஸ் ஜனனி!
50 வயதிலும் முகம் சுருக்கம் இல்லாமல்... ஐஸ்வர்யா ஜொலிக்கிறாரே என பலர் யோசிக்கலாம். ஆனால் அழகை தக்க வைக்கவோ, இளமையாக காட்டிக்கொள்ளவோ எவ்வளவு சிகிச்சை மேற்கொண்டாலும், விலை உயர்ந்த மேக்கப் சாதனங்கள் பயன்படுத்தினாலும், வயது அதிகரிக்க... அதிகரிக்க உடலில் ஏற்படும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும்.
அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராய்யின் கிளோஸ் அப் புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையுமே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில் ஐஸ்வர்யா ராய்யின் மேக்கப்பை தாண்டி, அவர் முகத்தில் பல்வேறு சுருக்கங்கள் இருப்பதை காண முடிகிறது.
அடேங்கப்பா ஓப்பன் நெக்? கழண்டு விழுந்துட போகுது... டாப் ஆங்கிளில் தாறுமாறு பண்ணும் கீர்த்தி சுரேஷ்!