துப்பாக்கி கவுண்டரின் வாழ்க்கை வரலாற்றை காப்பி அடித்து தான் RRR படம் எடுத்தாரா ராஜமவுலி?- கிளம்பிய புதுசர்ச்சை
தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரான துப்பாக்கி கவுண்டரின் வாழ்க்கையை காப்பி அடித்து RRR படம் எடுக்கப்பட்டுள்ளதாக புது சர்ச்சை கிளம்பி உள்ளது.
நான் ஈ, மகதீரா, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் என தொடர்ந்து பிரம்மாண்ட வெற்றிப்படங்களை கொடுத்து கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு இயக்குனர் ஆகிவிட்டார் ராஜமவுலி. இவர் இயக்கிய படங்கள் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தாலும் தொடர்ந்து காப்பி சர்ச்சையிலும் சிக்கி வருகிறது.
இவரது இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி திரைப்படம் பேட்மேன், அவெஞ்சர்ஸ், அவதார், 300, கிங்காங் என 30-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களை காப்பியடித்து எடுக்கப்பட்டது என்றும், அவை எந்தெந்த காட்சிகள் என்பதை விளக்கும் விதமாக நெட்டிசன்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீடியோ வெளியிட்டது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவு வைரல் ஆனது.
இதையும் படியுங்கள்... காப்பி அடித்ததிலும் பிரம்மாண்டமா! பாகுபலிக்காக 35 ஹாலிவுட் பட சீன்களை அபேஸ் பண்ணிய ராஜமவுலி - பகீர் வீடியோ இதோ
இந்நிலையில், இவர் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் புது சர்ச்சை கிளம்பி உள்ளது. இப்படத்தில் வரும் ராம்சரணின் கதாபாத்திரம் ஆந்திராவை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரான சீதாராமராஜுவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.
ஆனால் தற்போது அது தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரான துப்பாக்கி கவுண்டரின் வாழ்க்கையை காப்பி அடித்து எடுக்கப்பட்டுள்ளதாக புது சர்ச்சை கிளம்பி உள்ளது. இவரது வாழ்க்கையும், ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெறும் ராம்சரணின் கதாபாத்திரமும் ஒத்துப்போவதால், இரண்டையும் ஒப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.
மறுபுறம் இது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி உள்ளது பொறுக்காமல் தான் ராஜமவுலி மீது இவ்வாறு புகார்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக தெலுங்கு ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சோசியல் மீடியாவில் பேசுபொருள் ஆகியுள்ள இந்த விவகாரம் குறித்து ஆர்.ஆர்.ஆர் படக்குழு விளக்கம் அளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... துணிவு படத்தில் அஜித் ஹீரோவா? வில்லனா? - இயக்குனர் எச்.வினோத் ஓபன் டாக்