காப்பி அடித்ததிலும் பிரம்மாண்டமா! பாகுபலிக்காக 35 ஹாலிவுட் பட சீன்களை அபேஸ் பண்ணிய ராஜமவுலி - பகீர் வீடியோ இதோ

Baahubali : பாகுபலி படத்தின் காட்சிகள் எந்தெந்த ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளன என்பதை ஒப்பிட்டு நெட்டிசன் ஒருவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

Director SS Rajamouli copied 35 hollywood movie scenes for making baahubali

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை எடுத்தவர் இயக்குனர் ஷங்கர், இவருக்கு டஃப் கொடுக்கும் விதமாக டோலிவுட்டில் இருந்து களம் இறங்கி உள்ளவர் தான் ராஜமவுலி. இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தெலுங்கு திரையுலகில் இருந்தாலும், இவரது கெரியர் அசுர வளர்ச்சி கண்டது கடந்த 10 ஆண்டுகளில் தான்.

தெலுங்கில் ராம் சரண், காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு ரிலீசான மாவீரா படம் மூலம் இந்தியா முழுவதும் பேமஸ் ஆனார் ராஜமவுலி. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் இவர் இயக்கிய நான் ஈ திரைப்படம் இந்திய சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஏனெனில் ஒரு சின்ன ஈயை வைத்து இப்படி ஒரு பிரம்மாண்ட படமா என அனைவரும் கேட்கும் அளவுக்கு அல்டிமேட்டாக இயக்கி இருந்தார் ராஜமவுலி.

இதன்பின்னர் அவர் இயக்கிய பாகுபலி திரைப்படம் இந்திய சினிமாவின் ஒரு மைல்கல் திரைப்படமாக உள்ளது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்தை உலக சினிமா ரசிகர்களே வியந்து பார்த்தனர். அந்த அளவுக்கு தனது பிரம்மாண்ட படைப்பால் பிரம்மிப்பை ஏற்படுத்தி இருந்தார் ராஜமவுலி.

இதையும் படியுங்கள்... எது மாஸ்... மக்கள் சொல்லட்டும் - தனுஷை தாக்கி பேசினாரா சிம்பு... STR-ன் பேச்சு சர்ச்சையானதன் பின்னணி இதுதான்

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்திய சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக பாகுபலி 2 உள்ளது. இந்த அளவுக்கு பிரம்மாண்ட வெற்றியை ருசித்த இந்த இரண்டு படங்களும் ஹாலிவுட் படங்களின் காப்பி என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆனால் அதுதான் நிஜம்.

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களில் இடம்பெறும் காட்சிகள் அவதார், பேட்மேன், அவெஞ்சர்ஸ், கிங்காங், 300 உள்பட 30-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளன. பாகுபலி படத்தின் எந்தெந்த காட்சிகள் காப்பி அடிக்கப்பட்ட காட்சிகள் என்பதை ஒப்பிட்டு நெட்டிசன் ஒருவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

இதையும் படியுங்கள்... ஒரு வருஷத்துக்கு முன்பே ரகசிய திருமணம் செய்துகொண்ட குக் வித் கோமாளி புகழ்... வைரலாகும் போட்டோஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios