ஒரு வருஷத்துக்கு முன்பே ரகசிய திருமணம் செய்துகொண்ட குக் வித் கோமாளி புகழ்... வைரலாகும் போட்டோஸ்
Pugazh marriage : நடிகர் புகழ் கடந்த ஆண்டே அவரது காதலி பென்சியாவை பதிவு திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர் புகழ். இதில் இவர் செய்த டைமிங் காமெடிகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி புகழின் கெரியரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. யோகிபாபுவுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் பிசியான காமெடியன் என்றால் அது புகழ் தான். இவர் தற்போது டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி இவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படம் மிஸ்டர் ஜூ கீப்பர். இப்படத்தில் புகழுக்கு ஜோடியாக ஷிரிங்கன் சாவ்லா நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜே சுரேஷ் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் புகழ், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் காதலியான பென்சியாவை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் குடும்பத்தினர் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த அவர் திட்டமிட்டுள்ளாராம்.
இதையும் படியுங்கள்... எது மாஸ்... மக்கள் சொல்லட்டும் - தனுஷை தாக்கி பேசினாரா சிம்பு... STR-ன் பேச்சு சர்ச்சையானதன் பின்னணி இதுதான்
இந்நிலையில், நடிகர் புகழ் கடந்த ஆண்டே அவரது காதலி பென்சியாவை பதிவு திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. கோவையில் உள்ள பெரியார் படிப்பகத்தில் புகழும் பென்சியாவும் கடந்த வருடமே பதிவு திருமணம் செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தான் இவர்களது திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
இவர்களது காதலுக்கு முதலில் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாகவே இவர்கள் இருவரும் கடந்த ஆண்டே பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும், பின்னர் குடும்பத்தினர் சம்மதித்த பிறகு தற்போது அனைவர் முன்னிலையிலும் முறைப்படி திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பாரதிராஜா உடல்நிலை குறித்து வெளியான தகவல்..இயக்குனர் எப்படி இருக்கிறார் தெரியுமா?