MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாரதிராஜா உடல்நிலை குறித்து வெளியான தகவல்..இயக்குனர் எப்படி இருக்கிறார் தெரியுமா?

பாரதிராஜா உடல்நிலை குறித்து வெளியான தகவல்..இயக்குனர் எப்படி இருக்கிறார் தெரியுமா?

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் பாரதிராஜா ஓரிரு நாளில் வீடு திரும்ப உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

1 Min read
Author : Kanmani P
Published : Sep 02 2022, 09:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
BHARATHIRAJA

BHARATHIRAJA

தென்னிந்தியா சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் பாரதிராஜா. இவர் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் தனுஷுக்கு தாத்தாவாக நடித்துள்ளார். இயக்கத்தில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் சிறந்து விளங்கும் இவரை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். 

இந்நிலையில் 81 வயதான இயக்குனர் பாரதிராஜாவுக்கு, சமீபத்தில் மதுரை சென்று திரும்புகையில் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை திரும்புவதற்காக விமான நிலையம் வந்த இயக்குனர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். 

மேலும் செய்திகளுக்கு...சல்வாரில் அடக்கமாக வந்த நாயகி...அசந்துபோன ரசிகர்கள்...இதுவும் கிக்கு தான்!

23
BHARATHIRAJA

BHARATHIRAJA

இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ஒரு நாள் மதுரையிலேயே தங்கி ஓய்வெடுத்த பின்னர் சென்னை திரும்பினார். பின்னர் விடு திரும்பிய பாரதிராஜா நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார். 

மீண்டும் திடீர் உடல்நலக்குறைவு ஏற்படவே கடந்த மாதம் 24-ம் தேதி சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இயக்குனர் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார்.  பின்னர் அஜீரணக்கோளாறு, நீர்ச்சத்து குறைவு மற்றும் நுரையீரல் சளி உள்ளிட்ட காரணங்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவதாக தகவல் வெளியானது. 

மேலும் செய்திகளுக்கு...வெந்து தணிந்தது காடு ஆடியோ லாஞ்சுக்கு கெத்தாக ஹெலிகாப்டரில் வந்திறங்கிய சிம்பு

33
BHARATHIRAJA

BHARATHIRAJA

அதோடு மேல் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள  மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பாரதிராஜாவிற்கு அங்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. இதைடுத்து இசையமைப்பாளர் இளையராஜா, வைரமுத்து, ராதிகா  உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து இருந்தனர். அதோடு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் பிரபலங்கள் தெரிவித்தனர். இயக்குனருக்காக ரசிகர்கள் பலரும் பிராத்தனை செய்து வந்தனர். 

மேலும் செய்திகளுக்கு...வித்யாசமான உடையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய ஷில்பா ஷெட்டி... புடவையின் விலை எவ்வளவு தெரியுமா?

தற்போது பாரதிராஜாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து  பொது பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் அவர் ஓரிரு நாளில் வீடு திரும்ப உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
பாரதிராஜா

Latest Videos
Recommended Stories
Recommended image1
வெளிய போடி... அறிவுக்கரசியை அடிச்சு துரத்திவிட்ட கதிர் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் எதிர்பாரா திருப்பம்
Recommended image2
காத்திருக்கும் வானதி வீட்டார்... காணாமல் போன பாண்டியன் - அய்யனார் துணை சீரியலில் அடிபொலி ட்விஸ்ட்
Recommended image3
வீட்டை விட்டு விரட்டப்படும் மீனா... விஜயா பிளான் சக்சஸ் - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved