வெந்து தணிந்தது காடு ஆடியோ லாஞ்சுக்கு கெத்தாக ஹெலிகாப்டரில் வந்திறங்கிய சிம்பு
விழா மேடைக்கு முன்னால் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான மிகப்பெரிய மார்க் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இசை வெளியீட்டு விழா மேடை செட்டுகள் தயாரிப்பாளரால் வெளியிடப்பட்டு ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு இணைந்துள்ளனர் கௌதம் வாசுதேவனும் - சிம்புவும். நீண்ட இடைவெளிக்கு பிறக இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் 3 ஆண்டுகளுக்கு மேல் எதிர்பார்ப்பில் உள்ள படமாகும். இந்த படத்திற்காக உடல் எடையை வெகுவாக குறைத்து இருந்தார் சிம்பு. இதில் ராதிகா சரத்குமார், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தை வெளியிடும் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது.
ஏ.ஆர் ரகுமான் படத்திற்கான இசை அமைத்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. வெளியீட்டிற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் படத்தின் அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். முன்னதாக இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
மேலும் செய்திகளுக்கு...வித்யாசமான உடையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய ஷில்பா ஷெட்டி... புடவையின் விலை எவ்வளவு தெரியுமா?
இந்த நிலையில் தற்போது இசை வெளியீட்டின் மூலம் மீதியுள்ள பாடல்களும் வெளியிடப்பட உள்ளது. இன்று நடைபெற்று வரும் இசை வெளியீட்டு விழாவிற்கு கமல் மற்றும் உதயநிதி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளதாக ஏற்கனவே தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்சிக்கு நாயகன் சிம்பு மாஸாக ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு... 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை.. தமிழ்நாடு அரசின் விருது பெரும்.. படங்கள், நடிகர், நடிகைகள் பற்றிய முழு விவரம்!
இதற்காக விழா மேடைக்கு முன்னால் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான மிகப்பெரிய மார்க் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இசை வெளியீட்டு விழா மேடை செட்டுகள் தயாரிப்பாளரால் வெளியிடப்பட்டு ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதோடு இயக்குனர் கௌதம் மேனன் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே கெத்தாக இசை வெளியீட்டு மேடைக்கு வந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.