2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை.. தமிழ்நாடு அரசின் விருது பெரும்.. படங்கள், நடிகர், நடிகைகள் பற்றிய முழு விவரம்!

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல், 2014 ஆம் ஆண்டு வரை வெளியான சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், சின்னத்திரை மற்றும் குறும்படங்களுக்கான தமிழ்நாடு அரசு விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 

tamilnadu state film award full details here

தமிழில் வெளியாகும் தலைசிறந்த படங்களுக்கு, ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கி கௌரவிப்பதை வழக்கமாக வைத்துள்ளது. அந்த வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை வெளியான திரைப்படங்கள், சின்னத்திரை நெடுந்தொடர், மாணவர்கள் இயக்கிய குறும்படம் ஆகியவற்றிக்கு தற்போது ஒட்டு மொத்தமாக சேர்த்து, விருதுகள் வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த விருது விழா வரும் ஞாயிறு அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு, முதல் பரிசாக ரூ. 2 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ. 1 லட்சம்  மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது. அதேபோல் சிறப்பு பரிசாக 75 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

tamilnadu state film award full details here

சிறந்த நடிகர், நடிகை, மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சுமார் 160 பேருக்கு தலா 5 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளதாகவும், இதேபோல் சின்னத்திரையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை வெளியான, சிறந்த நெடுதொடர் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசாக ரூ .2 லட்ச ரூபாயும், இரண்டாவது பரிசாக ரூ.1 லட்ச ரூபாயும், சிறந்த வாழ்நாள் சாதனையாளருக்கு ரூ.1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த சீரியல் நடிகர், சீரியல் நடிகை, மற்றும்  தொழில்நுட்ப கலைஞர்கள் 81 பேருக்கு மூன்று பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளும் விருதுகளும் வழங்கப்பட உள்ளது. இதில் சிறந்த குறும்படத்திரக்கான விருதுகளும் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசின் விருதுகளை வாங்கும் படங்கள், நடிகர், நடிகைகள் பட்டியல் இதோ...

தமிழ்நாடு அரசு விருதுகள் - 2009
சிறந்த படங்கள்:
பசங்க, மாயாண்டி குடும்பத்தார், அச்சமுண்டு அச்சமுண்டு

2009 சிறந்த நடிகர் கரண் (மலையன்)
2009 சிறந்த இசையமைப்பாளர் சுந்தர் சி.பாபு(நாடோடிகள்)
2009 சிறந்த இயக்குநர்கள் வசந்தபாலன் (அங்காடித் தெரு)

2010 சிறந்த படங்கள்: மைனா,  களவாணி, புத்ரன்


2010 சிறந்த இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா(பையா)
2010 சிறந்த இயக்குநர்கள் பிரபு சாலமன் (மைனா)
2010 சிறந்த நடிகர் விக்ரம் (ராவணன்)

தமிழ்நாடு அரசின் விருதுகள் -2011
சிறந்த படங்கள் வாகை சூடவா, தெய்வத்திருமகள், உச்சிதனை முகர்ந்தால், சிறப்பு பரிசு மெரினா

2011 சிறந்த இசையமைப்பாளர்... ஹாரிஸ் ஜெயராஜ்(கோ) 
2011 சிறந்த இயக்குனர்  ஏ.எல்.விஜய் (தெய்வத்திருமகள்)
2011 சிறந்த நடிகர் விமல் (வாகை சூடவா)

2012 சிறந்த படங்கள்:
வழக்கு எண் 18/9 , சாட்டை, தோனி, சிறப்பு பரிசு - கும்கி

2012 சிறந்த இசையமைப்பாளர் இமான்(கும்கி
2012 சிறந்த இயக்குனர் பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
2012 சிறந்த நடிகர் ஜீவா (நீதானே என் பொன் வசந்தம்)

2013 சிறந்த படங்கள்:
ராமானுஜம், தங்கமீன்கள், பண்ணையாரும் பத்மினியும், சிறப்பு பரிசு - ஆள்

2013 சிறந்த இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம்(ராமானுஜன்)
2013 இயக்குனர் ராம் (தங்கமீன்கள்)
2013 சிறந்த நடிகர் ஆர்யா (ராஜா ராணி)

2014 சிறந்த படங்கள்: 

குற்றம் கடிதல் , கோலி சோடா, நிமிர்ந்து நில், சிறப்பு பரிசு - காக்கா முட்டை

2014 சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்(காவியத் தலைவன்)
2014 சிறந்த இயக்குனர் ராகவன் (மஞ்சப்பை)
2014 சிறந்த நடிகர் சித்தார்த்  (காவியத் தலைவன்)

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios