மனைவியாக வாழ்ந்தால் மாதம் 25 லட்சம் சம்பளம் : மனம் நொந்த விஷால் பட நடிகை !
நடிகை நீத்து சந்திரா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தொழிலதிபர் ஒருவர் மாத சம்பளத்திற்கு தன்னை மனைவியாக அழைத்ததாக கூறி உள்ளார்.

Nitu Chandra
விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளையில் மூன்று நாயகிகளில் ஒருவராக வந்து கவனத்தை ஈர்த்திருந்தார் பணக்கார வீட்டு பெண்ணாக வரும் தேஜாஸ்வினியாக நீத்து சந்திரா நடித்திருந்தார். பாலிவுட் நடிகையான இவரது கவர்ச்சி அந்த படத்தில் வெகுவாக ரசிகர்களை கவர்ந்திருந்தது.
மேலும் செய்திகளுக்கு...முதல் படத்திலேயே சம்பள விஷயத்தில் நயன்தாராவை மிஞ்சிவிட்டாரா 'கோப்ரா' பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி
முன்னதாக யாவரும் நலம், ஆதி பகவன், சேட்டை உள்ளிட்ட படங்களை தோன்றியவர் சிங்கம் 3 படத்தில் ஓசோனே சோனே என்னும் பாடலுக்கு நடனமாடியிருந்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டுள்ள நீத்து சந்திராவின் சமீபத்திய பேட்டி தான் தற்போது வைரலாகி வருகிறது.மனம் உடைந்து அவர் பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
Nitu Chandra
அந்த பேட்டியில் பேசிய நீத்து சந்திரா நான் 13-க்கும் அதிகமான தேசிய நடிகர்களுடன் நடித்துள்ளேன் இன்று எனக்கு எந்த வேலையும் கிடையாது. ஒரு தொழிலதிபர் என்னிடம் மாத சம்பளத்திற்கு மனைவியாக வரச் சொன்னார். அதும் 25 லட்சம் சம்பளமாக கொடுப்பதாக கூறியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு..சூடு பிடிக்கும் பிக்பாஸ் சீசன் 6 பணிகள்! பிரபல தொகுப்பாளரை களமிறக்கும் விஜய் டிவி! உறுதியான இரு போட்டியாளர்கள்
நான் மிகுந்த கவலையில் இருக்கிறேன் ஒரு இயக்குனர் நான் நேரத்திற்கு படபிடிப்பிற்கு வரவில்லை எனக் கூறி என்னை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார். என மிகுந்த வருத்தத்துடன் பேசி உள்ளார்.
Nitu Chandra
2005 ஆம் ஆண்டு கரம் மசாலா மூலம் ஹிந்தி சினிமாவுக்கு அறிமுகமான இவர் முன்னதாக விமான பணிப்பெண் அதில் விமான பணி பெண்ணாக நடித்திருந்தார் கோதாவரி என்கிற தெலுங்கு படம் மூலம் 2006இல் டோலிவுட் அறிமுகமாகி இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...anupama parameswaran : சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு! சேலையில் மயக்கும் 'அனுபமா பரமேஸ்வரன்'!
இவர் ட்ராபிக் சிக்னல், அப்பார்ட்மெண்ட், நோ ப்ராப்ளம் அதோட கிரேக்க திரைப்படம் ஹோம் ஸ்வீட் ஹோம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகையின் தற்போதைய எண் நிலை குறித்து பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.