MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • NEET போராட்ட மேடையில் பரபரப்பு... சனம் ஷெட்டியை பேச விடாமல் மைக்கை பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - காரணம் என்ன?

NEET போராட்ட மேடையில் பரபரப்பு... சனம் ஷெட்டியை பேச விடாமல் மைக்கை பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - காரணம் என்ன?

Sanam Shetty NEET Protest : சென்னையில் நடைபெற்று வரும் நீட் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த நடிகை சனம் ஷெட்டிக்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 25 2026, 10:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Mic Snatched From Sanam Shetty During NEET Protest
Image Credit : X

Mic Snatched From Sanam Shetty During NEET Protest

நீட் தேர்வை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் அந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சென்னை தி.நகரில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் நடிகை சனம் ஷெட்டி கலந்து கொண்டதும், அவரை அங்கிருந்தவர்கள் துரத்திவிட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் கலந்து கொண்ட சனம் ஷெட்டி, மாணவர்களின் உரிமைக்காகவே தான் வந்துள்ளதாக தெரிவித்தார். போராட்ட மேடையை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துபவர்களே உண்மையான பிரச்சினை என அவர் கூறினார். அப்போது, "நான் தளபதியின் தீவிர ரசிகை. நேற்று தான் ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட்டு வந்தேன்" என்று அவர் பேசியதும், அங்கிருந்த சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை; பல மடங்கு அபராதம்! ஜூலை 27-ல் அதிரடி மசோதா தாக்கல்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மைக் பறிக்கப்பட்டதால் பரபரப்பு
Image Credit : X

மைக் பறிக்கப்பட்டதால் பரபரப்பு

மாணவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பேச்சைத் தொடர்ந்த சனம் ஷெட்டி, "ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது கருத்தை வெளிப்படுத்தும் உரிமை உள்ளது. அதனால் யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை" என்று தெரிவித்தார்.

அவர் பேசிக் கொண்டிருந்தபோது, மாணவர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மேடையில் வந்து எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு பதிலளித்த சனம் ஷெட்டி, "யாருடைய அழுத்தத்தாலும் நான் இங்கு வரவில்லை. மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே சொந்த விருப்பத்தில் வந்துள்ளேன்" என்றார்.

இந்த விவாதம் நீடித்துக் கொண்டிருந்தபோது, மேடையில் இருந்த இளைஞர் ஒருவர் சனம் ஷெட்டியிடம் இருந்து மைக்கை வாங்க முயன்றதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் மற்றொருவர் மைக்கைப் பறித்ததால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

Related Articles

Related image1
Now Playing
நீட் கொடுமைக்கு முடிவு கட்டும் வரை பின்வாங்க மாட்டோம்! - மதுரையில் மாணவர்கள் ரயில் மறியலால் பரபரப்பு
Related image2
Now Playing
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம்! CPI அலுவலகத்தை முற்றுகையிட்ட CJP தொண்டர்கள்
34
பின்னர் செய்தியாளர்களிடம் ஆவேசம்
Image Credit : X

பின்னர் செய்தியாளர்களிடம் ஆவேசம்

இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய நடிகை சனம் ஷெட்டி, செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் பேச வேண்டியது என்ன என்பதை மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது. மாணவர்களுக்காக பேச வேண்டும் என்று அழைத்துவிட்டு, பின்னர் பேச விடாமல் தடுத்தனர். நான் ஜனநாயகன் படம் பார்த்தேன் என்பதற்காக என்னை 'ஜோக்கர்' என்று விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றார்.

மேலும், "கருத்துச் சுதந்திரம் பற்றி பேசுபவர்களே மேடையில் என் கையில் இருந்த மைக்கை பறித்தனர். இது எந்த வகையான ஜனநாயகம்? பேசும் உரிமையே மறுக்கப்பட்ட நிலையில், அவர்கள் ஜனநாயகத்திற்காக போராடுவதாக கூறுவது முரண்பாடாக உள்ளது" என்று விமர்சித்தார்.

44
'மாணவர்களுக்கு மட்டுமே ஆதரவு'
Image Credit : X

'மாணவர்களுக்கு மட்டுமே ஆதரவு'

தான் எந்த அரசியல் நோக்கத்துடனும் வரவில்லை என்றும், மாணவர்களின் நலனுக்காக மட்டுமே போராட்டத்தில் பங்கேற்றதாகவும் சனம் ஷெட்டி வலியுறுத்தினார்.

"எனது முழு ஆதரவும் மாணவர்களுக்கே. ஆனால் மாணவர்களின் உணர்வுகளை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்த யாரும் முயற்சிக்கக் கூடாது. எந்த சூழலிலும் நான் என் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டேன்" என்று அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், சனம் ஷெட்டியின் கருத்துகளும், மாணவர்களின் எதிர்ப்பும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நீட்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jana Nayagan Day 2 Box Office : வசூலில் செஞ்சுரி அடித்த ஜனநாயகன்... 2ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
Recommended image2
Now Playing
கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
Recommended image3
NEET Protest : விஜய் மௌனம் காப்பது ஏன்? சி.ஜே.பி போராட்டத்தில் கொதித்தெழுந்த பா.ரஞ்சித்!
Related Stories
Recommended image1
Now Playing
நீட் கொடுமைக்கு முடிவு கட்டும் வரை பின்வாங்க மாட்டோம்! - மதுரையில் மாணவர்கள் ரயில் மறியலால் பரபரப்பு
Recommended image2
Now Playing
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம்! CPI அலுவலகத்தை முற்றுகையிட்ட CJP தொண்டர்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved