நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவை ஒழிக்க 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் பல மடங்கு அபராதம் விதிக்கும் புதிய வரைவு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நீட் (NEET) தேர்வுகளில் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைக் கண்டித்து தலைநகர் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போரட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மாணவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் அமைப்பினர் திரண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

இந்த கூட்டத்தில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை முற்றுமுழுதாக ஒழிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட உள்ள புதிய வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய வரைவு மசோதா, தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கருணையற்ற நடவடிக்கைகளை எடுக்க வழிவகை செய்கிறது. அதாவது வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் சிறை தண்டனை, கூடுதல் அபராதம் விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் செய்துள்ளது. 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, பெரும் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ராகுல் காந்தியை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த போலீஸ்! மூக்கில் ரத்தம் வழிந்ததா? பரபரப்பு தகவல்!

புதிய வரைவு மசோதா ஜூலை 27ம் தேதி தாக்கல்?

மேலும் வழக்கு விசாரணைகள் பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படாமல், விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். மாணவர்கள் மற்றும் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த வரைவு மசோதாவை ஜூலை 27-ஆம் தேதியே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை

இதற்கிடையே மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை போராடி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருடன் மத்திய அரசு இன்று பேச்சு வார்த்தை நடத்தியது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின்போது நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வரை நிதி உதவி வழங்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் ஆகிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:Gen Z Movement: கரப்பன்பூச்சி கட்சி: ஜென் Z-ன் அரசியல் எழுச்சியா, வீழ்ச்சியா?

தர்மேந்திர பிரதான் ராஜினமாவுக்கு டைம் கேட்ட மத்திய அரசு

அதே வேளையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை குறித்து முடிவெடுக்க, சனிக்கிழமை மதியம் வரை மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளதாக CJP கட்சி தெரிவித்துள்ளது. சுமார் இரண்டு மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரங்கா, "தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்த எங்கள் கோரிக்கைக்கு நாளை மதியம் வரை அரசு அவகாசம் கேட்டுள்ளது. விரைவில் அவரை பதவியில் இருந்து நீக்குவார்கள் என்று நம்புகிறோம்," என்றார்.

கட்சியின் மற்ற இரண்டு கோரிக்கைகளுக்கு அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். NEET தேர்வில் பாதிக்கப்பட்ட தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவது, மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட FIR மற்றும் பிற சட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவது ஆகிய இரண்டு கோரிக்கைகளுக்கும் அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக ரங்கா தெரிவித்தார்.