MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கவர்ச்சிக்கு ஓகே... தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் ஹீரோயின்ஸ்!

கவர்ச்சிக்கு ஓகே... தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் ஹீரோயின்ஸ்!

தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள சில நடிகைகள், கவர்ச்சிக்கு தடை போடாமல்... சம்பள விஷயத்தில் கறார் காட்டி வருகிறார்கள். அப்படி அதிக சம்பளம் வாங்கும் டாப்  ஹீரோயின்ஸ் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.  

3 Min read
Author : manimegalai a
| Updated : Jun 12 2023, 10:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

திரையுலகை பொறுத்தவரை ஹீரோக்கள் 50 கோடி, 100 கோடி என சம்பளம் வாங்கினாலும் ஹீரோயின்களுக்கு அதிக பட்சமாக 5 கோடி கொடுப்பதே பெரிய விஷயம். அதிலும் 3 கோடியை தாண்டி நடிகைகள் சம்பளம் வாங்கினால் அது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் சமீப காலமாக ஹீரோயின் சப்ஜெட் படங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகைகள் ஹீரோக்களுக்கு சளைத்தவர்கள் நாங்கள் அல்ல என சம்பள விஷயத்தில் கறார் காட்டி வருகிறார்கள். அப்படி பட்ட  நடிகைகள் யார் யார் என பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
நயன்தாரா:

நயன்தாரா:

கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்துடன் வலம் வரும் இவர், மலையாள திரையுலகில் இருந்தது தமிழ் சினிமாவிற்கு வந்தவர். முதல் படத்திலேயே சரத்குமாருக்கும், இரண்டாவது படத்தில் ரஜினிகாந்துக்கும் ஜோடி போட்டு குறுகிய காலத்தில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடி போட்டார். இவரின் கால்ஷீட் தான் வேண்டும் என, காத்துக்கிடந்த நடிகர்களும் உள்ளனர். ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை தாண்டி, கதையின் நாயகியாகவும் நடித்து வரும் நயன்தாரா 5- 7 கோடி வரை தன்னுடைய படங்களுக்கு சம்பளமாக கேட்கிறார். தற்போது பாலிவுட் திரையுலகிலும் நுழைந்துள்ளதால், 10 கோடிக்கு ரூட் போட்டு வருகிறாராம்.

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சிக்காக கமல் ஹாசனுடன் கை கோர்த்த இயக்குனர் எச்.வினோத்!
 

38
ஐஸ்வர்யா ராய்:

ஐஸ்வர்யா ராய்:

50 வயதை கடந்த பின்னரும் இவங்களுக்கு இருக்கும் வரவேற்பு வேற லெவல். பாலிவுட் திரையுலகில் தேடப்படும் ஹீரோயினாக இருந்தாலும், கதை பிடித்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார் ஐஸ்வர்யா ராய். இவர் தமிழில் சமீபத்தில் நடித்திருந்த பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடிக்க 10 கோடி வரை சம்பளமாக பெற்றாராம். அந்த படத்தில் நடித்த நடிகைகளில் இவருக்கு தான் இவ்வளவு பெரிய தொகை சம்பளம் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

48
குந்தவை த்ரிஷா:

குந்தவை த்ரிஷா:

நயன்தாராவுக்கு நிகராக சுமார் 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக மட்டுமே நடித்து வரும் த்ரிஷா. கடந்த 5 வருடங்களாக சரியான பட வாய்ப்பு மற்றும் வெற்றி கொடுக்க முடியாமல் திணறி வந்த நிலையில், பொன்னியின் செல்வன் ஹிட்... இவரின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியுள்ளது. குந்தவையின் அழகில் கவர்த்திழுக்கப்பட்ட விஜய், அஜித் ஆகியோர் கூட இளம் நடிகைகளை டீலில் விட்டு விட்டு 40 வயதான த்ரிஷாவுடன் ஜோடி போட ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த ஆர்வத்தை தனக்கு சாதகமாக பயன் படுத்திகொண்டு த்ரிஷா, இதுவரை 2 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த நிலையில், இப்போது அப்படியே டபுள் மடங்காக 4 முதல் 5  கோடி வரை கேட்கிறாராம்.

கண்ட இடத்தில் கை வைத்து.. ஐஸ்வர்யா ராய்யிடம் பளார் வாங்கிய தமிழ் நடிகர்? இவரா... அவரா... ஆராயும் நெட்டிசன்கள்!
 

58
சமந்தா:

சமந்தா:

திருமணமாகி, விவாகரத்தான பிறகும் கொஞ்சம் கூட... மவுசு குறையாத நாயகியாக இருப்பவர் சமந்தா தான். நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகள் நடிக்க தயங்கும், சர்ச்சை காட்சிகள் மற்றும்  அதிரடி காட்சிகளில் கூட தன்னுடைய சக்தியை மீறி சாதித்து காட்டுபவர். குறிப்பாக 'பேமிலி மேன்' வெப் தொடரில் இவர் டூப் போடாமல் நடித்த சண்டை காட்சிகள் பாராட்டை பெற்றது. அதே போல் சூப்பர் டீலக்ஸ் படத்தில் இவர் நடித்த போல்டான கதாபாத்திரத்துக்கு தேசிய அளவிலான ஊடகங்களே புகழ்ந்து தள்ளியது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சாகுந்தலம் தோல்வியை தழுவினாலும், சம்பள விஷயத்தில் கறாராக இருக்கிறாராம். 5 கோடி வரை சம்பளம் பெற்ற சமந்தா... ஹாலிவுட் வரை சென்று விட்டதால், 8 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம்.

68
கீர்த்தி சுரேஷ்:

கீர்த்தி சுரேஷ்:

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கலக்கி வரும் தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ், முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் சம்பவம் குறைவாக இருந்தாலும் ஓகே சொல்கிறார். அதே போல் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் இவர், 3 - 5 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம். கதை பிடித்திருந்தால் சில கோடிகளை தளர்த்தி கொள்ளவும் தயார் என்று சொல்லும் அளவுக்கு கீர்த்தி கொஞ்சம் பக்குவமான நடிகை என்பது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல் எனலாம். தன்னுடைய தந்தையும் ஒரு தயாரிப்பாளர் என்பதால்... அவர்களின் கஷ்ட நஷ்டத்தை புரிந்து செயல்படுவதாக திரை வட்டாரத்தில் ஒரு பேச்சு.

சிவகார்த்திகேயன் - அதிதி ஷங்கர் பாடிய 'மாவீரன்' படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
 

78
ராஷ்மிகா மந்தனா:

ராஷ்மிகா மந்தனா:

திரையுலகில் அடியெடுத்து வைத்த வேகத்தில், நேஷ்னல் கிரஷ் என்கிற அளவுக்கு ரசிகர்கள் மனதை கவர்ந்து விட்ட ராஷ்மிகா... கதைக்கு தேவை என்றால், எந்த அளவுக்கு கவர்ச்சி காட்டவும் தயார் என ஓப்பனாக கூறுவதோடு, சம்பள விஷயத்தில் மட்டும் குறைக்க வேண்டும் என கூறக்கூடாது என ஆரம்பத்திலேயே கூறி விட்டு தான் கதையே கேட்கிறாராம். சினிமாவில் நுழைந்த போது சில லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கிய அம்மணி இப்போது 5 கோடிக்கு குறைவில்லாமல் சம்பளம் பெறுகிறார்.
 

88
டபுளான சம்பளம்:

டபுளான சம்பளம்:

இவர்களை தொடர்ந்து, ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத் சிங், பூஜா ஹெக்டே ,மாளவிகா மோகனன், காஜல் அகர்வால் போன்ற நடிகைகள் 2 கோடிக்கு குறைவாகவே சம்பளம் பெற்றுக்கொண்டிருந்த நிலையில்... சமீப காலமாக தங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து, டபிள் மடங்காக உயர்த்தி சம்பளம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

அம்மாவுக்காக புதிய வீட்டை இடித்த சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ்! ஏன் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஐஸ்வர்யா ராய்
நயன்தாரா
கீர்த்தி சுரேஷ்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image2
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image3
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved