நயன்தாரா உண்மையில் திரையரங்கு பிஸ்னஸில் இருங்குகிறாரா? வெட்டவெளிச்சமான உண்மை!
நடிகை நயன்தாரா, சென்னையில் உள்ள பிரபல திரையரங்கை வாங்கி, அந்த இடத்தில் புதிய மல்டிபிளக்ஸ் கட்ட உள்ளதாக வெளியான தகவல் குறித்த உண்மை, தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில், லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை தனதாக்கிக் கொண்டுள்ள நயன்தாரா, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளில் ஹீரோயினாக மட்டுமே நடித்து வருகிறார்.
நயன்தாரா பல்வேறு மொழிகளில் நடித்திருந்தாலும், தமிழ் திரையுலகம் தான் இவருக்கு அடுத்தடுத்த வெற்றிகளையும், லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தையும் கொடுத்தது. இதன் காரணமாகவோ என்னவோ, தமிழ் நாட்டு மருமகளாகவும் மாறினார் நயன்தாரா.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கடைசி நாயகன் சரத் பாபுவா? வெளியான ஆச்சர்ய தகவல்!
விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன்பு திரைப்பட நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவனுடனான உறவுக்குப் பின்னர், ஒரு சில தொழில்களிலும், பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் ஏற்கனவே ரவுடி பிக்சர்ஸ் மூலம் சில படங்களை தயாரிப்பது, மட்டுமின்றி விநியோகமும் செய்து வரும் நயன்தாரா - விக்கி ஜோடி, டீ நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார். அதே போல் லிபாம் அழகு சாதன பொருள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார் நயன்தாரா. அதே போல் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
68 வயதிலும் ஃபேஷன் உடையில் அதிரவிடும் ஆண்டவர்! கமல்ஹாசனின் நியூ போட்டோ ஷூட் வைரல்!
இதைத்தொடர்ந்து நடிகை நயன்தாரா, வடசென்னை பகுதியில் இயங்கி வந்த பழமையான அகஸ்தியா தியேட்டரை விலைக்கு வாங்கி, அந்த இடத்தில் அதிநவீன வசதிகள் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கம் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளதாக கடந்த இரண்டு தினங்களாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் வட்டமிட்டு வருகிறது.
இதற்கான வேலைகளும் முழு வீச்சில் நடந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், நயன்தாரா தரப்பில் இருந்து இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த தகவல் குறித்து. பிரபல இணையதள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
அதாவது அகஸ்தியா தியேட்டர், தனிநபர் சொத்து அல்ல. அகஸ்தியா அறக்கட்டளையின் கீழ் தான் இயங்கி வருகிறது. அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் என்பதால், இதனை விற்க முடியாது. ஏற்கனவே மெட்ரோ பணிகளுக்காக கொஞ்சம் இடத்தை கொடுத்து விட்டதால், மீதமுள்ள இடத்தில் சங்கரா நேத்ராலயாவுடன் இணைந்து மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டவிருக்கிறோம். உண்மையில் இதற்கான ஒப்பந்தம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே போடப்பட்டுவிட்டது. இதனால் நயன்தாரா இந்த இடத்தை வாங்கி விட்டார் என்று பரப்பப்படும் தகவல்களில் துளியும் உண்மை இல்லை என்றும், இதற்கான பேச்சுவார்த்தை கூட நடக்கவில்லை என தெரிவித்துள்ளனர். (நன்றி விகடன்)