MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 68 வயதிலும் ஃபேஷன் உடையில் அதிரவிடும் ஆண்டவர்! கமல்ஹாசனின் நியூ போட்டோ ஷூட் வைரல்!

68 வயதிலும் ஃபேஷன் உடையில் அதிரவிடும் ஆண்டவர்! கமல்ஹாசனின் நியூ போட்டோ ஷூட் வைரல்!

நடிகர் கமல்ஹாசனின் லேட்டஸ்ட் ஃபேஷன் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : May 23 2023, 10:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

உலகநாயகன் என்கிற வார்த்தைக்கு ஏற்ற போல், திரைப்படங்களிலும் சரி ஃபேஷனிலும் சரி இளம் நடிகர்களுக்கு செம டஃப் கொடுத்து வருபவர் நடிகர் கமலஹாசன். இந்நிலையில் இவர் கதர் உடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து துவங்கி உள்ள, ஹவுஸ் ஆஃப் கதர் நிறுவனத்தின் பிராண்டிகிற்காக, சமீபத்தில் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

26

நடிகர் கமலஹாசன் தற்போது திரைப்படங்களிலும், தன்னுடைய மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் படு பிசியாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். சினிமாவில் கிடைத்த இடம், தற்போது வரை அரசியலில் நடிகர் கமலஹாசனுக்கு கிடைக்கவில்லை என்றாலும்...  விடாப்பிடியாக தன்னுடைய அரசியல் பங்களிப்பை வெளிப்படுத்தி வருவதோடு, அவ்வபோது தன்னுடைய கட்சி தொண்டர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி, வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்.

சாலை விபத்தில் சீரியல் நடிகை மரணம்! ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு செல்லும் போது நடந்த பயங்க சம்பவம்!
 

36

மேலும் கடந்த சில வருடமாக நடிகர் கமலஹாசன் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு,  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த தயாரித்த 'விக்ரம்' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 150 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம், சுமார் 500 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது.
 

46

இந்த படத்தின் உற்சாகத்தால் மீண்டும் அடுத்த அடுத்த படங்களில் நடிக்க துவங்கி உள்ளதோடு மட்டுமின்றி, திரைப்பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சிம்புவை வைத்து ஒரு படத்தையும், சிவகார்த்திகேயனை வைத்து மற்றொரு படத்தையும் கமலஹாசன் தயாரிக்க உள்ளார்.

டயலாக் வரவில்லை... 10... 12.. டேக் போய்டுச்சு! தம் அடிக்க சொன்ன சரத்பாபு! ரஜினி பகிர்ந்த நினைவுகள்!
 

56

அதேபோல் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வந்த இந்தியன் 2 திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்டாலும், ஒரு சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றது. பின்னர் மீண்டும் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரவே... முழு வீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பை துவங்கிய இயக்குனர் ஷங்கர் இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளார்.

66

விரைவில்  கமல்ஹாசனும் தன்னுடைய அடுத்த படத்திற்காக மணிரத்னத்துடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படி அரசியல் - சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் கமலஹாசன், அவ்வப்போது தன்னுடைய தொழில் நிறுவனங்களையும் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார். அந்த வகையில் கதர் ஆடைகளுக்காக இவர் துவங்கிய ஹவுஸ் ஆஃப் காதர் ஆன்லைன் விற்பனை நிறுவனத்திற்கு. தற்போது கலக்கல் ஆன போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார். வெள்ளை நிற உடையில் ஆங்காங்கு பெயிண்ட் தெளித்தது போல் இருக்கும் ட்ரெண்டிங் ஆன டிசைனில், பாலைவன பகுதிகளில், இரண்டு கறுப்பின மாடல்களுடன் எடுத்து கொண்டுள்ள போட்டோ ஷூட் படு வைரலாக பார்ப்பட்டு வருகிறது.

அல்லு அர்ஜுனின் 'புஷ்பா தி ரூல்' ரிலீஸ் தேதி குறித்து வெளியான தகவல்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
யாருக்கும் தெரியாமல் பிளான் பண்ணிய கார்த்திக் – ஷாக்கான சந்திரகலா; கார்த்திகை தீபம் சீரியல்!
Recommended image2
கருவை கலைக்க துணிந்த ரோகிணி! ஜோதிடரின் முகத்திரையை கிழித்த கார்த்திக்.. கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image3
புருஷனை கைக்குள்ள போட இதான் வழி! - மீனா கொடுத்த ஐடியாவை எக்ஸிகியூட் பண்ணும் கோமதி; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved