திருமணத்திற்கு பின் பிரபலங்களுக்கு மத்தியில்.. விக்கிக்கு பிரமாண்டமாக பர்த்டே கொண்டாடிய நயன்தாரா.! போட்டோஸ்!
நேற்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இதனை நயன்தாரா மிகவும் பிரமாண்டமாக செலிபிரேட் செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
நயன்தாராவை திருமணம் செய்த பின்னர், முதல் முறையாக கொண்டாடியுள்ள பிறந்தநாளை படு ரொமான்டிக்காக இந்த வருடம் கொண்டாடி சிறப்பித்துள்ளார். இதில் கெளதம் மேனன் போன்ற சில பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர் இது குறித்த புகைப்படம் தான் தற்போது வெளியாகி படு வைரலாக நயன் - விக்கி ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டுள்ளது.
திரைப்பட பணியில் நயன் - விக்கி ஆகிய இருவரும் எவ்வளவு பிசியாக இருந்தாலும், பிறந்தநாள், குடும்ப விழா என வந்தால், அனைத்து பணிகளையும் ஓரம்கட்டி வைத்து விட்டு, தங்களுடைய காதலுக்கும், பெற்றோர் அன்புக்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருவதை பார்க்க முடிகிறது.
மேலும் செய்திகள்: முடிவுக்கு வரப்போகிறதா பாரதி கண்ணம்மா...? யாரும் எதிர்பாராத தருணம்..! வெளியான பரபரப்பு புரோமோ!
அந்த வகையில், சமீபத்தில் கூட நயன்தாராவின் அம்மா பிறந்தநாளை, கேரளாவில் கொண்டாடி மகிழ்ந்தனர் நயன் - விக்கி ஜோடி. அப்போது நயனின் அம்மா... தனக்கு இன்னொரு தாய் என வர்ணித்து, அவருக்கு நெற்றியில் முத்தமித்தபடி விக்கி வெளியிட்ட புகைப்படம் மிகவும் வைரலாக பார்க்கப்பட்டு, அனைவராலும் பாராட்ட பட்டது. இப்படி ஒரு மருமகன் கிடைப்பது வரம் என, பலர் விக்னேஷ் சிவனை புகழ்ந்து தள்ளினர்.
இதை தொடர்ந்து, நேற்று தன்னுடைய 37 ஆவது பிறந்தநாளை விக்னேஷ் சிவன் கொண்டாடியுள்ளார். விக்னேஷ் சிவனை காதலிக்க துவங்கியதில் இருந்து, இவரது பிறந்தநாளை படு பிரமாண்டமாக கொண்டாடி வரும் நயன், திருமணத்திற்கு பின் முதல் முறையாக, வரும் காதல் கணவரின் பிறந்தநாளை படு ரொமான்டிக்காக துபாயில் புஜ்ஜி கலீஃபா முன் கொண்டாடிய புகைப்படங்கள் நேற்று வெளியான நிலையில், தற்போது கேக் கட்டிங் போட்டோஸ் சில வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: இரவு பார்ட்டியில் மூச்சுமுட்ட குடித்துவிட்டு... போதையில் குத்தாட்டம் ஆடிய நடிகை ராஷ்மிகா - வைரலாகும் வீடியோ
இதில் வழக்கம் போல், விக்னேஷ் சிவனுக்கு பிடித்த நிறமான சிவப்பு நிறத்திலேயே அலங்கரிக்கப்பட்ட இடத்தில், நயன் - விக்கி இருவருமே கருப்பு நிற உடையில் ஜொலிக்கிறார்கள். ஏற்னகவே இதே போன்ற செட்டப்பில் கடந்த ஆண்டு விக்கி பிறந்தநாள் செலிப்ரேட் செய்தார். அந்த செட்டப் விக்கிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அதே போன்ற செட்டப்பை போட்டு விக்கிக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளார் நயன்.
மேலும் இந்த பிறந்தநாள் பார்ட்டியில், கெளதம் மேனன் போன்ற சில பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த பிறந்தநாளை வழக்கம் போல் ரோமாட்டிக்குக்கு பஞ்சம் இல்லாமல் கொண்டாடியுள்ளது இந்த ஜோடி. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருவதோடு, பலர் விக்னேஷ் சிவனுக்கு இந்த ஆண்டு மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என தங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: வாத்தி கம்மிங்... திடீரென ரிலீஸ் தேதியை அறிவித்து ஷாக் கொடுத்த தனுஷின் வாத்தி படக்குழு - எப்போ ரிலீஸ் தெரியுமா