முடிவுக்கு வரப்போகிறதா பாரதி கண்ணம்மா...? யாரும் எதிர்பாராத தருணம்..! வெளியான பரபரப்பு புரோமோ!
தற்போது வெளியாகியுள்ள பாரதி கண்ணம்மா சீரியலின் ப்ரோமோவை பார்த்து, இந்த சீரியல் முடிவுக்கு வர போகிறதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
விஜய் டிவியில், தற்போது டி.ஆர்.பி-யில் முதல் இடத்தை பிடித்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாரதி கண்ணம்மா'. உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளாமல், வீணாக மனைவியை சந்தேகப்பட்டு வெறுத்து ஒதுக்கும் கணவனிடம் தானை உத்தமி என நிரூபிக்க போராடி வரும் மனைவியை பற்றிய கதை தான் பாரதி கண்ணம்மா. இத்தனை நாள் இந்த சீரியலில் மறக்கப்பட்டு கொண்டு சென்ற உண்மைகள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், பாரதியை, கண்ணம்மா கட்டி அணைக்கும் காட்சி காட்டப்பட்டுள்ளது. எனவே இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்ப துவங்கி விட்டனர்.
மேலும் செய்திகள்: வாத்தி கம்மிங்... திடீரென ரிலீஸ் தேதியை அறிவித்து ஷாக் கொடுத்த தனுஷின் வாத்தி படக்குழு - எப்போ ரிலீஸ் தெரியுமா
பாரதியின் ஒட்டு மொத்த மருத்துவமனையும் தீவிர வாதிகளால் கடந்த சில தினங்களாக ஹைஜாக் செய்யப்பட்ட நிலையில், ஒருவழியாக பல்வேறு சிக்கல்களை கடந்து, பிணைக்கைதிகளாக உள்ள மருத்துவர்கள், நர்ஸ், நோயாளிகள், உள்ளிட்ட அனைவரையும் அதிரடி படையை சேர்ந்த போலீசார் காப்பாற்றி பத்திரமாக வெளியே கொண்டு வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: ஒருவழியாக முடிவுக்கு வந்தது பைக் ட்ரிப்... வைரலாகும் அஜித்தின் அன்சீன் கிளிக்ஸ் இதோ
அப்போது, பாரதி மட்டும் மிஸ் ஆவதை உணர்ந்த கண்ணம்மா அவரை அழைத்து வர மீண்டும் மருத்துவமனைக்கு உள்ளே செல்கிறார். அங்கு தீவிரவாதிகளால் அடித்து துன்புறுத்தப்பட்ட நிலையில் முகத்தில் ரத்தம் வழிய, கைகள் கட்டப்பட்ட பாரதியை பார்க்கிறார். கண்ணம்மாவை கண்டதும் அங்கிருந்து செல்லும் படி கண்ணம்மாவை பாரதி வற்புறுத்தி, தன் மேல்... பாம் கட்டப்பட்டிருக்கும் தகவலை கூறுகிறார். அனால் பாரதியை விட்டு செல்ல மனம் இல்லாத கண்ணம்மா, போனால் இருவரும் வெளியே செல்வோம்... அல்லது இருவரும் இரண்டு விடுவோம் என அவரை கட்டி அணைத்து கொள்கிறார்.
மேலும் செய்திகள்: இரவு பார்ட்டியில் மூச்சுமுட்ட குடித்துவிட்டு... போதையில் குத்தாட்டம் ஆடிய நடிகை ராஷ்மிகா - வைரலாகும் வீடியோ
பின்னர் பாம் மருத்துவமனை வெடித்து சிதறும் காட்சிகளும் காட்டப்படுகிறது. இருவரும் பாம் பிளாஸ்டில் மாட்டி கொண்டார்களா? அல்லது இருவரும் தப்பித்தார்களா.. அப்படியே தப்பித்தால், இனியாவது கண்ணம்மாவின் மனதை புரிந்து கொண்டு, பாரதி மனதார ஏற்றுக்கொள்வாரா? அப்படியே ஏற்றுக்கொண்டால் இந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா? என ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
தற்போது இந்த புரோமோ வெளியாகி... பல்வேறு கேள்விகளை எழுப்ப வைத்துள்ளது அந்த புரோமோ இதோ...