ஒருவழியாக முடிவுக்கு வந்தது பைக் ட்ரிப்... வைரலாகும் அஜித்தின் அன்சீன் கிளிக்ஸ் இதோ
Ajith : பைக் ட்ரிப்பின் போது ரோட்டோர கடையில் அமர்ந்து அஜித் உணவருந்தும் போதும், டீ குடிக்கும் போதும் எடுத்த அன்சீன் புகைப்படங்கள் சில வெளியாகி உள்ளன
பைக் ஓட்டுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர் அஜித். சில நாட்கள் ஓய்வு கிடைத்தால் கூட நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக பைக் ட்ரிப் கிளம்பி விடுவார் அஜித். அந்த வகையில் கடந்த மாதம் லடாக்கிற்கு பைக் ட்ரிப் கிளம்பினார் அஜித். பின்னர் அங்கிருந்து காஷ்மீர், மணாலி என தொடர்ந்து ஒரு மாதமாக வட இந்தியாவில் பைக் ட்ரிப் மேற்கொண்டு வந்தார் அஜித்.
அஜித்தின் இந்த பைக் ட்ரிப்பில் நடிகை மஞ்சு வாரியரும் சில நாட்கள் கலந்துகொண்டார். லடாக் சென்றபோது அஜித்துடன் அவர் பைக்கில் வலம் வந்த புகைப்படங்களும் வெளியாகின. வழக்கமாக அஜித் பைக் ட்ரிப் சென்றால் ஒன்றிரண்டு புகைப்படங்கள் தான் வெளியாகும், ஆனால் இம்முறை தினந்தோறும் அவரது புகைப்படங்களும், வீடியோக்களும் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இதையும் படியுங்கள்... சிகிச்சைக்கு பணமின்றி தவித்த பழம்பெரும் நடிகை.. விஷயம் தெரிஞ்சதும் நேரில் வந்து உதவிக்கரம் நீட்டிய அமைச்சர்
இதனால் ரசிகர்களும் உற்சாகமாக இருந்தன. இந்நிலையில், தற்போது அஜித்தின் ஒரு மாத பைக் ட்ரிப் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து சென்னை வந்துவிட்டார் அஜித். இங்கு சில நாட்கள் ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் ஏகே 61 பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளார். இதனிடையே அஜித் பைக் ட்ரிப்பின் போது எடுக்கப்பட்ட அன்சீன் புகைப்படங்கள் சில வெளியாகி உள்ளன.
அதில் ரோட்டோர கடையில் அமர்ந்து அஜித் உணவருந்தும் போதும், டீ குடிக்கும் போதும் எடுத்த புகைப்படங்களும் இடம்பெற்று உள்ளன. அந்த புகைப்படங்களில் அஜித்தின் எளிமையை பார்த்து வியந்துபோன அவரது ரசிகர்கள், அவரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... வயதை மிஞ்சிய நடிப்பு...இந்தியன் 2 படப்பிடிப்பில் நான்ஸ்டாப் ரிஸ்க் எடுத்த கமலஹாசன்