மீண்டும் ஹனி மூனா..? திடீர் என ஜோடியாக வெளிநாட்டுக்கு பறந்த நயன் - விக்கி ஜோடி!
இயக்குனர் விக்னேஷ் சிவன், ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்து முடித்த நிலையில், தற்போது திடீர் என தன்னுடைய காதல் மனைவி நயன்தாராவுடன், வெளிநாட்டுக்கு பறந்துள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

5 ஆண்டுகளுக்கு மேலாக, காதலித்து வந்த நயன் - விக்கி ஜோடி, கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி, பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் தங்களை இணைத்து கொண்டனர். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த இவர்களது திருமணத்தில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து திரையுலகை சேர்ந்த டாப் பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.
இதுகுறித்த சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாகியது. மேலும், இவர்கள் திருமணத்தில் போடப்பட்ட சாப்பாடு முதல், நயன் - விக்கி அணிந்திருந்த ஆடை, ஆபரணங்கள் வரை அனைத்தும் பேசு பொருளாக மாறியது.
மேலும் செய்திகள்: ட்விட்டரில் தேசிய கொடியை ப்ரொபைல் பிக்சராக வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
திருமணம் முடிந்த கையேடு, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்ற இந்த ஜோடி... பின்னர் ஹனி மூனுக்காக தாய்லாந்து சென்றனர். அங்கு சுமார் ஒரு வாரங்கள் தங்களுடைய ஹனி மூனை செலிபிரேட் செய்து விட்டு நாடு திரும்பிய ஜோடி, மீண்டும் தங்களுடைய வேலைகளில் பிஸியாகினர்.
அந்த வகையில் நயன்தாரா, ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வந்த 'ஜவான்' படப்பிடிப்பில் கலந்து கொண்டார். விக்னேஷ் சிவன், சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பியாட் போட்டிக்கான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய நிலையில் அதனை சிறப்பாக செய்து முடித்தார். இதற்காக அவரை பலரும் மனதார பாராட்டினர்.
மேலும் செய்திகள்: படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய நடிகர் விஷால்!
தற்போது நயன்தாரா - விக்கி ஜோடி மீண்டும் தங்களுடைய ஓய்வு நாட்களை கழிப்பதற்காக ஸ்பெயின் நாட்டுக்கு பறந்துள்ளனர். இந்த தகவல் தற்போது வெளியாக... மீண்டும் இருவரும் ஹனி மூன் சென்றுள்ளார்களா? என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
நடிகை நயன்தாராவுக்கு திடீர் என உணவு ஒவ்வாமை காரணமாக, நேற்று மருத்துவமனையில் அனுமதிக்க பட்டதாகவும் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியான நிலையில், இதனை நயன்தாரா தரப்பு மறுத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: விஜய் டிவி செட்டில் காதலை சொல்லி... கல்யாணத்தையும் முடித்து கொண்ட பாவனி -அமீர்! வைரலாகும் போட்டோஸ்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.