படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய நடிகர் விஷால்!

நடிகர் விஷால் படப்பிடிப்பில் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ள தகவல் தற்போது வெளியாகி திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Actor vishal met accident in shooting

நடிகர் விஷால், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’.  ஏற்கனவே விஷால் - ஆர்யாவை வைத்து, எனிமி' படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் இந்தப் படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஷாலும், எஸ்.ஜே. சூர்யாவும் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.  இந்த படத்தில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ' பட நாயகி ரித்து வர்மா நாயகியாக நடித்து வருகிறார். 

Actor vishal met accident in shooting

மேலும் செய்திகள்: விஜய் டிவி செட்டில் காதலை சொல்லி... கல்யாணத்தையும் முடித்து கொண்ட பாவனி -அமீர்! வைரலாகும் போட்டோஸ்!

 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு, தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில நாட்களாக சென்னையில் செட் அமைத்து  நடந்து வருகிறது. இந்நிலையில்  கடந்த ஒரு வாரமாக பாடல்கள் மற்றும் ஆக்சன் காட்சிகளும் படமாக்கப்பட்டு வந்த நிலையில், விஷால் திடீர் என ஆக்சன் காட்சி படமாக்கப்பட்ட போது விபத்தில் சிக்கியுள்ளார்.

Actor vishal met accident in shooting

மேலும் செய்திகள்: Exclusive Interview: அவங்க அப்பாவால அப்படி ஆக முடியல.. அந்த ஆசையை அதிதி நிரைவேற்றிடாங்க கார்த்தி கூறிய தகவல்!
 

நேற்று இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதில் நடிகர் விஷாலுக்கு கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்களின் அறிவுரை படி, விஷால் தற்போது ஓய்வு எடுத்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் தற்போது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஷாலுக்கு 'லத்தி' படத்தின் ஆக்‌ஷன் காட்சி படப்பிடிப்பின்போதும் அடிக்கடி காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios