விஜய் டிவி செட்டில் காதலை சொல்லி... கல்யாணத்தையும் முடித்து கொண்ட பாவனி -அமீர்! வைரலாகும் போட்டோஸ்!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளர்களான பாவனி - அமீர் ஜோடி தற்போது பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் மீண்டும் ஒன்று சேர்ந்து நடனமாடி வரும் நிலையில், இவர்களது திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ரெட்டைவால் குருவி' சீரியல் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பாவனி, இதை தொடர்ந்து நடிகர் பிரஜனுக்கு ஜோடியாக நடித்த 'சின்னத்தம்பி' சீரியல் பட்டி தொட்டி எங்கும் இவரை பிரபலமடைய வைத்தது.
pavani reddy ameer
கணவரின் திடீர் தற்கொலையால், மன அழுத்தத்தில் இருந்த பாவனி, கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். வழக்கம் போல் இவரும் காதல் சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருடன் காதலோடு விளையாடிய அமீருக்கு ஜோடியாக, 'பிக்பாஸ்' ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் இணைந்து நனடம் ஆடி வருகிறார்.
மேலும் செய்திகள்: Exclusive Interview: அவங்க அப்பாவால அப்படி ஆக முடியல.. அந்த ஆசையை அதிதி நிரைவேற்றிடாங்க கார்த்தி கூறிய தகவல்!
ஏற்கனவே பாவனி மீது காதலில் இருந்த அமீர் ஒருவழியாக தான் நினைத்ததை நிறைவேற்றி விட்டார், சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளன்று பாவனி அமீரை காதலிப்பதாக இன்ஸ்டாகிராமில் பக்கத்தின் மூலம் தெரிவித்திருந்தார். அதே போல் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர், பாவனிக்கு காதல் பரிசாக மோதிரம் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இவர்களுடைய காதல் நாளுக்கு நாள் வலுவாகி கொண்டே செல்லும் நிலையில், காதலை கூறிய விஜய் டிவி செட்டிலேயே திருமணத்தையும் தடபுடலாக நடத்தி விட்டது அமீர் - பாவனி ஜோடி. இந்த வாரம் நடந்த டான்ஸ் நிகழ்ச்சியில் இவர்களது திருமணம் குறித்த காட்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: நமக்கு சோறு தான் முக்கியம்... வெளிநாட்டில் வெரைட்டியாக வெளுத்து கட்டும் பிரியா பவானி ஷங்கர்! ரீசென்ட் போட்டோஸ்
இந்த புகைப்படங்களை கண்ட நெட்டிசன்கள்.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலிக்க துவங்கி, பிக்பாஸ் ஜோடிகள் செட்டில் காதலை வெளிப்படுத்தி, அதே செட்டில் அமீர் திருமணத்தையும் முடித்து விட்டதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.