நமக்கு சோறு தான் முக்கியம்... வெளிநாட்டில் வெரைட்டியாக வெளுத்து கட்டும் பிரியா பவானி ஷங்கர்! ரீசென்ட் போட்டோஸ்
நடிகை பிரியா பவானி ஷங்கர் பாரிஸுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கு அவருக்கு பிடித்த உணவு வகைகளை வாங்கி சாப்பிட்டு கொண்டே போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சமீப காலமாகவே, திரைப்பட நடிகர், நடிகைகள் ஷூட்டிங் இல்லாத போது... தங்களின் ஓய்வு நாட்களை கழிப்பதற்கு வெளிநாடுகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதில் பிரியா பவானி மட்டும் விதிவிலக்கா என்ன? வழக்கம் போல் இவரும் பாரிஸுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு எடுக்கும் விதவிதமான புகைப்படங்களை, இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸாகவும், புகைப்படங்களாகவும் வெளியிட்டு வரும் நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் சாப்பாட்டு பிரியர்களை வெறுப்பேற்றுவது போல் உள்ளது.
மேலும் செய்திகள்: நடிகை நயன்தாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா? வெளியான அதிர்ச்சி தகவல்!
விதவிதமான வெரைட்டி ஸ்னாக்ஸ், ஐஸ் க்ரீம் போன்றவற்றை சாப்பிட்டபடியே போஸ் கொடுத்துள்ளார். இதற்க்கு பலரும், எங்கு சென்றாலும் நமக்கு சோறு தான் முக்கியம் என கிண்டலாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பிரியா பவானி சாப்பாட்டு பிரியர் என்பதால், சுற்றுலா முடித்து கொண்டு இந்தியா வரும் போது உடல் எடை கூடி காணப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மேலும் செய்திகள்: உஷார்... ஜிமில் ஒர்க் அவுட் செய்தபோது பிரபல காமெடி நடிகருக்கு திடீர் மாரடைப்பு.! எச்சரிக்கும் மருத்துவர்கள்!
யானை படத்தின் வெற்றியால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் பிரியா பவானி நடிப்பில் அடுத்ததாக திருச்சிற்றம்பலம் படம் வெளியாக உள்ளது.
மேலும் அகிலன், பொம்மை, ருத்திரன், பத்துதல, இந்தியன் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்கள் இவரது கை வசம் உள்ளது. சுற்றுலா முடிந்து திரும்பியதும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: நடிகை சினேகாவின் தாய் - தந்தைக்கு நடந்த சஷ்டியப்த பூர்த்தி! ஒன்று கூடிய உறவுகளுடன் களைகட்டிய கொண்ட்டாட்டம்!