ஓவர் கடி ஒர்க்கவுட் ஆகவில்லை! 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' செய்த வசூல் இம்புட்டுதானே? கலங்கி நிற்கும் வடிவேலு!
வைகை புயல் வடிவேலு நடிப்பில்... கடந்த வெள்ளிக்கிழமை வெளியான வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூன்றே நாட்களில் டல் அடிக்க துவங்கியுள்ளதால், வசூலும் படு மோசமாகியுள்ளது.
காமெடி நடிகர் வடிவேலு, இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் நடித்து வந்த 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' படத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு தரவில்லை என தயாரிப்பிலாளர் சங்கத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் காரணமாக, ரெட் கார்டு போடப்பட்டது.
இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருந்தார் வடிவேலு. பின்னர் ஒருவழியாக இருவருக்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டியதை ஒட்டி, இவர் மீது போடப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டது. தற்போது வடிவேலு நடித்தால், ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்கிற கொள்கையில் இருந்து பின்வாங்கியுள்ள நிலையில், நீண்ட நாளுக்கு பின் என்ட்ரி கொடுத்த 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் மட்டும் ஹீரோவாகவே நடித்திருந்தார்.
டிசம்பர் 9 ஆம் தேதி வெளியான 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தை, தலைநகரம் படத்தின் இயக்குனர் சுராஜ் இயக்கி இருந்தார். லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்திருந்தது. படம் வெளியான அன்று, மண்டேலா புயலின் தாக்கம் தமிழகத்தில் நிலவி வந்ததால், வலுவிழந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம், 1 முதல் 1.5 கோடி வரை மட்டுமே வசூலித்ததாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து இரண்டாவது நாளில் 1 கோடியும், மூன்றாவது நாளில் விடுமுறை நாள் என்பதால் 2 கோடி வரை வசூலிக்கு, இதுவரை 4 முதல் 4.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், படம் வெளியான 3 நாளில் திரையரங்கில்... இப்படம் டல் அடிக்க துவங்கி விட்டதாகவும், இதற்க்கு காரணம் ஓவர் காமெடி செய்கிறேன் என்கிற பெயரில் வடிவேலு ஓவராக கடித்து படத்தையே காலி செய்து விட்டதாக விமர்சனங்கள் பறக்கிறது. கலவையான விமர்சனங்களே கிடைத்து வருவதால், வடிவேலு ரீ-என்ட்ரி கொடுத்த இந்த படம் திரையரங்கில் இருந்து ஒரு வாரத்திற்குள்ளேயே வாஷ் அவுட் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு வடிவேலுக்கு கிடைக்கவில்லை என்றாலும், முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட் ஆகியுள்ளார். அந்த வகையில் உதயநிதி நடிக்கும் மாமனிதன், மற்றும் லாரன்ஸ் நடிக்கும், சந்திரமுகி 2 ஆகிய படங்கள் இவரின் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் படம் வெளியாகி சில தினங்கள் மட்டுமே ஆகும் நிலையில், போட்ட காசையாவது தயாரிப்பு நிறுவனம் எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.