அமுல் பேபி போல் அழகு.. முதல் முறையாக குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட ஆர்யா - சாயிஷா ஜோடி! வைரலாகும் போட்டோஸ்!
நடிகர் ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை சாயிஷா முதல் முறையாக, தன்னுடைய மகள் ஆரியானா புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகர் ஆர்யா, பிரபல நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில்... ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு முதல் முறையாக நெகிழ்ச்சியான பதிவுடன், மகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
சாயிஷா தமிழில் 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான 'வனமகன்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். இவருடைய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு, இவருடைய அழகும், நடன திறமையும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. எனவே அடுத்தடுத்து, கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பன், போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
Sarathkumar: நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி! என்ன ஆச்சு..? வெளியான பரபரப்பு தகவல்..!
ஆர்யாவுடன் கஜினிகாந்த், மற்றும் காப்பன் படத்தில் நடித்த பொது ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் இடையே காதல்மலர்ந்தது. இவர்களின் காதல் குறித்து சில தகவல்கள் வெளியான போது, இருதரப்புமே வாய் திறக்காத நிலையில், திடீரென ஆர்யா மற்றும் சாயிஷா தங்களுடைய திருமணம் குறித்து வெளிப்படையாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
அதன்படி இவர்களுடைய திருமணம் 2019 ஆம் ஆண்டு நடந்து முடிந்தது. இதன் பின்னர் சாயிஷா நடிக்க கமிட்டாகி இருந்த ஒரே ஒரு கன்னட படத்தில் மட்டும் நடித்து முடித்தார். பின்னர் திரையுலகில் இருந்து விலகிய அவர் அவ்வபோது சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்த பொதும், கர்ப்பம் குறித்து தெரிவிக்கவில்லை.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆர்யா - சாயிஷா ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தைக்கு ஒரு வயது ஆன பிறகும் கூட குழந்தையின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டாமல் இருந்து வந்த, ஆர்யா - சாயிஷா ஜோடியின் மகள் ஆரியானாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஆர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சாயிஷா மிகவும் நெகிழ்ச்சியான பதிவுடன், இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து சாயிஷா கூறியுள்ளதாவது, "பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே, நீங்கள் எப்போதும் சிறந்த கணவர், தந்தை மற்றும் சிறந்த மனிதர். நீங்கள் எங்கள் வாழ்க்கையில் இருப்பதற்காக நாங்கள் மிகவும் பாக்கியமானவர்கள். நீங்கள் என்னுடையதாக இருப்பதற்கு நன்றி. நான் உன்னை என்றென்றும் நேசிக்கிறேன் என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவும் மற்றும் குழந்தையின் புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.