குடும்பத்தோடு சிங்கப்பூரில் கும்மாளம் போடும் மைனா நந்தினி..! குழந்தை பெற்றபின்பும் குறையாத ரொமான்ஸ்! போட்டோஸ்
நடிகை மைனா நந்தினி, தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையோடு சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். குடும்பத்துடன் பல்வேறு இடங்களுக்கு சென்றபோது எடுத்த புகைப்படங்களை இவர் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமானவர் மைனா நந்தினி. இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி, அருள்நிதி நடித்த வம்சம் ஆகிய படங்களில் நடித்தார்.
திரைப்படங்களில் இவரது நடிப்புக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், சின்னத்திரையில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடரில் மைனா என்கிற காமெடி ரோலில் நடித்தார்.
மேலும் செய்திகள்: Breaking: 'பொன்னியின் செல்வன் 1 ' திரைப்படத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுதந்ததோடு மைனா என்பது இவரின் அடையாளமாகவே மாறியது. பின்னர் சில திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். சமீபத்தில் வெளியான 'விக்ரம்' படத்தில், விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.
இவரது முதல் திருமணம், சோகத்தில் முடிந்தாலும் இரண்டாவது திருமணம் சந்தோஷமாக அமைந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு, சீரியல் நடிகர் யோகீஸ்வரனை திருமணம் செய்து கொண்ட இவருக்கு துருவ் என்கிற மகன் ஒருவரும் உள்ளார்.
மேலும் செய்திகள்: ஒரே நேரத்தில் இரண்டு பேர் வேண்டாம்... ஷாருக்கான் மகளுக்கு டேட்டிங் அட்வைஸ் கொடுத்த அம்மா கௌரி கான்!
விஜய் டிவி நிகழ்ச்சியில் அவ்வப்போது தலை காட்டி வரும் மைனா...பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் இதுவரை உறுதிசெய்யப்படாத நிலையில், தன்னுடைய குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றுள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ள மைனா... குழந்தை பெற்ற பின்னரும் கணவருடன் ரொமான்டிக் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். அந்த வைரல் புகைப்படங்கள் இதோ..
மேலும் செய்திகள்: தேவதை வம்சம் நீயோ... தங்க நிற தாவணியில் பேரழகியாய் மின்னிய அதிதி ஷங்கர்! கவர்ந்திழுக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!