Breaking: 'பொன்னியின் செல்வன் 1 ' திரைப்படத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு போட்டுள்ளது.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை இந்த படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. சோழ மன்னர்களின் வரலாற்றை, புனைந்து எழுதப்பட்ட நாவலான கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமிழர்கள் மத்தியில் மட்டுமின்றி உலக சினிமா ரசிகர்கள் அனைவரிடத்திலுமே நிலவி வருகிறது.
மேலும் இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வபோது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் விதமாக பல்வேறு வீடியோக்கள் போன்றவையும் வெளியிடப்பட்டு வருகிறது. பிரமிக்க தக்க காட்சிகளுடன்... மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.
மேலும் செய்திகள்: தேவதை வம்சம் நீயோ... தங்க நிற தாவணியில் பேரழகியாய் மின்னிய அதிதி ஷங்கர்! கவர்ந்திழுக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
இந்நிலையில் நாளை வெளியாகும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடக் கூடாது என லைக்கா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சுமார் 20045க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியிட தடை விதித்து நீதிபதி எம்.சுந்தர் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் செய்திகள்: ஒரே நேரத்தில் இரண்டு பேர் வேண்டாம்... ஷாருக்கான் மகளுக்கு டேட்டி அட்வைஸ் கொடுத்த அம்மா கௌரி கான்!
ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன், சரத்குமார், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முன்பதிவு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.