- Home
- Cinema
- ஒரே நேரத்தில் இரண்டு பேர் வேண்டாம்... ஷாருக்கான் மகளுக்கு டேட்டிங் அட்வைஸ் கொடுத்த அம்மா கௌரி கான்!
ஒரே நேரத்தில் இரண்டு பேர் வேண்டாம்... ஷாருக்கான் மகளுக்கு டேட்டிங் அட்வைஸ் கொடுத்த அம்மா கௌரி கான்!
தன்னுடைய மகள் சுஹானா கானுக்கு அவருடைய தாய் கௌரி கான் டேட்டிங் அட்வைஸ் கொடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

நட்சத்திர தம்பதிகளான ஷாருக்கான் மற்றும் கௌரி கானின்மகள் சுஹானா கான் தற்போது தன்னுடைய படிப்பின் காரணமாக, நியூயார்க்கில் உள்ளார்.
இவர் தன்னுடைய படிப்பை முடித்து, இந்தியா திரும்பியதும்... திரைப்படங்களில் நடிக்க துவங்குவார் என கூறப்படுகிறது. காரணம் சுஹானா மிகவும் பிரபலமான நட்சத்திரக் தம்பதிகளின் மகள் என்பதை தாண்டி சமீப காலமாக, கதாநாயகிகளை மிஞ்சும் விதத்தில் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
மேலும் செய்திகள்: இயக்குனர் பாரதிராஜாவை வீட்டிற்கு சென்று நலம் விசாரித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்!
ஏற்கனவே தன்னுடைய மகளுக்கு எப்படி பட்ட பாய் பிரென்ட் வேண்டும் என கூறி நடிகர் ஷாருகான் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, சுஹானா கானுக்கு அவரது தாய் கௌரி கான் டேட்டிங் அட்வைஸ் கொடுத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
பாலிவுட் பிரபலங்கள் பங்குபெறும், விறுவிறுப்பான நிகழ்ச்சிகளில் ஒன்றான... 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் கௌரி கான் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது கௌரி கானிடம்... உங்களுடைய நீங்கள் கொடுக்கக்கூடிய டேட்டிங் அட்வைஸ் என்ன என்று கரண் ஜோஹர் கேட்டார்.
மேலும் செய்திகள்: தேவதை வம்சம் நீயோ... தங்க நிற தாவணியில் பேரழகியாய் மின்னிய அதிதி ஷங்கர்! கவர்ந்திழுக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
இதற்க்கு கௌரி கான், ஒரே நேரத்தில் இரண்டு பேருடன் மட்டும் எப்போதும் டேட்டிங் செய்யாதே என கூறுவேன் என பளீச் என பதில் கூறியுள்ளார். இவர் இப்படி பேசியுள்ள புரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.