இயக்குனர் பாரதிராஜாவை வீட்டிற்கு சென்று நலம் விசாரித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்!

உடல்நல குறைவு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, டிஸ்சார்ஜ் ஆன இயக்குனர் பாரதிராஜாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவரது வீட்டிற்கு சென்று நலம் விசாரித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
 

AIADMK coordinator O Panneerselvam went to director Bharathiraja home and inquired health

இயக்குனர் பாரதிராஜா கடந்த மாதம் திடீரென  உடல் நல குறைவு காரணமாக மதுவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இயக்குனர் பாரதிராஜாவுக்கு அஜீரண கோளாறு, நீர் சத்து குறைபாடு மற்றும் நுரையீரல் சளி போன்ற பிரச்சனைகள் உள்ளதாகவும், இதற்காக தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் பாரதிராஜா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

AIADMK coordinator O Panneerselvam went to director Bharathiraja home and inquired health

சுமார் 15 நாட்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என, பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களையும், பிரார்த்தனையும் தெரிவித்து வந்தனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின், சென்னை நீலாங்கரைகள் அமைந்துள்ள தன்னுடைய வீட்டில் பாரதிராஜா ஓய்வெடுத்துவந்தார்.

மேலும் செய்திகள்: தேவதை வம்சம் நீயோ... தங்க நிற தாவணியில் பேரழகியாய் மின்னிய அதிதி ஷங்கர்! கவர்ந்திழுக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

பாரதிராஜா மருத்துவமனையில் இருந்த போது, போன் மூலம் நலம் விசாரித்த முதலமைச்சர் முக ஸ்டாலின், பின்னர் வீட்டிற்கே சென்று நலம் விசாரித்தார். இதை தொடர்ந்து ஓய்வில் இருந்த பாரதி ராஜாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன், மீண்டும் சிறுநீர குழாயில் ஏற்பட்ட அடைப்பு  காரணமாக, மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று திரும்பிய இவரை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

AIADMK coordinator O Panneerselvam went to director Bharathiraja home and inquired health

இயக்குனர் பாரதிராஜாவுக்கு திடீர் என, சிறுநீரகத்தில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடுதிரும்பிய நிலையில்... அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக அவருடைய வீட்டிற்க்கே சென்று, நலம் விசாரித்துள்ளார்.

மேலும் செய்திகள்: மஹாலட்சுமி - ரவீந்தர் வீட்டில் களைகட்டிய விசேஷம்..! மாலையும் கழுத்துமாக போஸ் கொடுத்த புதுமண தம்பதி..!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios