மஹாலட்சுமி - ரவீந்தர் வீட்டில் களைகட்டிய விசேஷம்..! மாலையும் கழுத்துமாக போஸ் கொடுத்த புதுமண தம்பதி..!
ஒரு வருடத்திற்கு மேலாக காதலித்து திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள மஹாலட்சுமி - ரவீந்தர் ஜோடி வீட்டில் இன்று விசேஷம் கலை கட்டியள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பார்க்கப்பட்டு வருகிறது.
சன் ம்யூசிக் தொலைக்காட்சியில், தொகுப்பாளினியாக இருந்த விஜே மகாலட்சுமி. தன்னுடைய முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்து, மகன் சச்சினுடன் வாழ்ந்து வந்தார்.
முக்கிய சீரியல்களில் நடித்து வந்த இவர், சில கிசுகிசுவில் சிக்கிய நிலையில்... திடீர் என பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டது, திரையுலகில் பேசுபொருளாக மாறியது.
மேலும் செய்திகள்: வாயடைத்து போக வைக்கும் தனுஷின் பர்ஃபாமென்ஸ்... பிரபலம் வெளியிட்ட 'நானே வருவேன்' முதல் விமர்சனம் இதோ..!
திருமணம் முடிந்த கையேடு... பல்வேறு ஊடகங்களுக்கு மாறி மாறி பேட்டி கொடுத்து வந்த இந்த ஜோடி அவ்வப்போது செல்லும் இடமெல்லாம், விதவிதமான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் தான் பிரைவேட் ஜெட்டில், ஹனி மூனுக்கு சென்று வந்த இந்த ஜோடி வீட்டில் முக்கிய விசேஷம் ஒன்று நடந்து முடிந்துள்ளது. அதாவது மகாலட்சுமிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்வு தான் நடந்துள்ளது.
மேலும் செய்திகள்: 20 கிலோ எடையை குறைத்து எப்படி..? உச்ச கட்ட கவர்ச்சி உடையில் சிக்ஸ் பேக் உடலை காட்டி ரகசியத்தை வெளியிட்ட கிரண்!
ரவீந்தர் - மஹாலட்சுமி ஆகியோரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி மாலையம் கழுத்துமாக இருவரும் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இதை தொடர்ந்து இந்த ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.