20 கிலோ எடையை குறைத்து எப்படி..? உச்ச கட்ட கவர்ச்சி உடையில் சிக்ஸ் பேக் உடலை காட்டி ரகசியத்தை வெளியிட்ட கிரண்!
82 கிலோவில் இருந்து 62 கிலோ எடைக்கு மாறியுள்ள கிரண்... தன்னுடைய முந்தைய புகைப்படம் மற்றும் தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டு, உடல் எடையை குறித்த ரகசியம் குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த கிரண், தற்போது வயது அதிகரித்து விட்டதாலும், உடல் எடை கூடியதாலும் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.
சமீப காலமாக, சோனியா அகர்வால், அமலா பால், சமந்தா போன்ற திருமணம் ஆன நடிகைகளும், திருமணம் ஆகி விவாகரத்தான நடிகைகள் கூட, தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருவதால், அதே போன்ற பட வாய்ப்பு தனக்கும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் கிரணும் கார்த்திருக்கிறார்.
மேலும் செய்திகள்: வாயடைத்து போக வைக்கும் தனுஷின் பர்ஃபாமென்ஸ்... பிரபலம் வெளியிட்ட 'நானே வருவேன்' முதல் விமர்சனம் இதோ..!
பட வாய்ப்பை கைப்பற்ற, விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட துவங்கிய இவருக்கு, பின்னர் இதையே ஒரு சைடு பிஸ்னஸ் ஆக செய்து கொண்டிருக்கிறார். தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதற்கு என்றே ஆப் ஒன்றை உருவாக்கி அதில், கலக்கலான கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் சந்தாதாரர்களுக்கு தரிசனம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
உடல் எடை கூடி இவர் காணப்பட்ட கிரண், உடல் எடையை குறைத்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலர் தங்களுடைய அபிப்ராயத்தை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் கூறி வந்த நிலையில், கடின உழைப்புக்கு பின்னர், சுமார் 20 கிலோ எடையை குறைத்து, சிக்ஸ் பேக் தோற்றத்திற்கு மாறியுள்ள புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
மேலும் செய்திகள்: 71 வயது நடிகருக்கு ஜோடியாகிறாரா ஜோதிகா..? ஜோதிகாவின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்..!
உடல் எடையை எப்படி குறைத்தேன் என்கிற ரகசியத்தையும் பகிர்ந்து கொண்டுள்ள கிரண்... இது குறித்து போட்டுள்ள பதிவில்... 82 கிலோ எடையில் இருந்து, தற்போது 62 கிலோவை எட்டியுள்ளேன். இதற்கான பயணம் மிகவும் கடினமாக இருந்தது.
உடல் எடையை குறைப்பது எளிதான விஷயம் இல்லை. கடின உழைப்பு தேவை,உங்களுக்கு பிடித்த உணவை கை விட வேண்டும். நிறைய மனநிலை மாற்றங்கள் ஏற்படும், எரிச்சல்..முடி உதிர்தல்..தோல் சுருங்குதல் போன்ற மாற்றங்களுக்கு பின்னர் நான் என் சிறந்த தோற்றத்தைக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
மேலும் செய்திகள்: நடிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்... 20 கோடி நிலத்தை மீட்டெடுத்த சந்தோஷத்தில் கண்ணீர் மல்க நன்றி!
எடை குறைப்பு செய்து சிக்ஸ் பேக்குக்குமாடியுள்ளார். சரியாக சாப்பிடுவது உணவுக் கட்டுப்பாடு அல்ல இது ஒரு வாழ்க்கைமுறையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிடுவது எனக்கு நன்கு கைகொடுத்தது. எனது வளர்சிதை மாற்ற விகிதத்தை வேலை செய்தேன் கஸ்டமைஸ் உணவு இல்லை.. ஃபேன்ஸி டயட் இல்லை. வீட்டு உணவு மட்டுமே என தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவும், இதில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.