71 வயது நடிகருக்கு ஜோடியாகிறாரா ஜோதிகா..? ஜோதிகாவின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்..!
நடிகை ஜோதிகாவின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தில் 71 வயது நடிகருக்கு இவர் ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல்ஹாசன், சூர்யா, என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருப்பவர் ஜோதிகா, நடிகர் சூர்யாவுடன் இவர் தொடர்ந்து சில படங்கள் நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் இவர்களுடைய திருமணத்திற்கு, சூர்யா - ஜோதிகா வீட்டில் பச்சை கொடி காட்டவில்லை என்றாலும், பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமண வாழ்க்கையில் இணைந்தனர்.
திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகிய ஜோதிகா, இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பின்னர், கடந்த 2015 ஆம் ஆண்டு '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். அதிகப்படியாக பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின், இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும் செய்திகள்: நடிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்... 20 கோடி நிலத்தை மீட்டெடுத்த சந்தோஷத்தில் கண்ணீர் மல்க நன்றி!
திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இன்றி, 2டி என்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம், கணவருடன் சேர்ந்து பல தரமான கதையம்சம் கொண்ட படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் இவர்களின் தயாரிப்பில் நடிகை சாய் பல்லவி கடைசியாக நடித்து வெளியான 'கார்கி' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் வரவேற்பு கிடைத்தது.
நடிகை ஜோதிகா கடைசியாக நடிகர் சசிகுமாருக்கு தங்கையாக நடித்த 'உடன்பிறப்பே' திரைப்படம் வெளியான நிலையில், இதை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: பியூட்டி பார்லர் தோழியுடன் டூர் அடிக்கும் மீனா..! விதவிதமான உடையில் வேற லெவல் கொண்டாட்ட வீடியோ..!
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் உருவாகும், மலையாள திரைப்படத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குனர் Jeo Baby இயக்க உள்ளாராம். 71 வயதாகும் மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்க உள்ள தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.