நடிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்... 20 கோடி நிலத்தை மீட்டெடுத்த சந்தோஷத்தில் கண்ணீர் மல்க நன்றி!
பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் 20 கோடி மதிப்புள்ள நிலத்தை, போலி பத்திரப்பதிவு மூலம் வேறொருவர் எடுத்து கொண்ட நிலையில், அந்த நிலம் புதிய சட்டத்தால் மீட்டெடுக்க பட்டுள்ளதற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காலத்தில் அழியாத திரைப்படங்களான 'வசந்த மாளிகை', 'வாணி ராணி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். கருணாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு, வெங்கடேஷ் கார்த்தி என்ற மகன் இருந்தார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு இவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இன்னும் மகனின் மறைவில் இருந்து மீளமுடியாமல் நடிகை வாணி ஸ்ரீ தவித்து வரும் நிலையில், இவருக்கு சொந்தமாக சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் 3 கிரவுண்ட் 1902 சதுர அடி இருந்த நிலத்தை, ஒருவர் போலி பத்திரப்பதிவு மூலம் தனதாக்கி கொண்டார். இந்நிலையில் தன்னுடைய நிலத்தை மீட்க அவர் போராடி வந்த நிலையில், புதிய சட்டத்தால் மீண்டும் இழந்த நிலத்தை மீட்டெடுத்துள்ளார்.
மேலும் செய்திகள்: அடேங்கப்பா... 170 ஆவது படத்திற்கு ரஜினிக்கு மட்டும் இத்தனை கோடி சம்பளமா?
தலைமைச் செயலகத்தில் போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையை, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடங்கி வைத்த முதல் நாளிலேயே போலி பத்திரப்பதிவால் சென்னை அமைந்தகரையில் உள்ள நிலத்தை இழந்த நடிகை வாணிஸ்ரீக்கு, இந்த நிலத்தை முதல்வர் மீட்டு கொடுத்துள்ளார். சுமார் 20 கோடி மதிப்பிலான நிலத்தை புதிய சட்டம் மூலம் மீட்டு கொடுத்து இன்ப அதிர்ச்சி தந்த முதல்வருக்கு வாணிஸ்ரீ கண்ணிக் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்: பியூட்டி பார்லர் தோழியுடன் டூர் அடிக்கும் மீனா..! விதவிதமான உடையில் வேற லெவல் கொண்டாட்ட வீடியோ..!