MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அடேங்கப்பா... 170 ஆவது படத்திற்கு ரஜினிக்கு மட்டும் இத்தனை கோடி சம்பளமா?

அடேங்கப்பா... 170 ஆவது படத்திற்கு ரஜினிக்கு மட்டும் இத்தனை கோடி சம்பளமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 170 ஆவது படத்திற்கு வாங்க உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி சில விமர்சனங்களுக்கு ஆகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Sep 27 2022, 10:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்கிற பெயருடன் 70 வயதிலும் ஹீரோ சப்ஜெக்ட் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து அசத்தி வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான 'அண்ணாத்த' திரைப்படம், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான நிலையில் கலவையான விமர்சனங்ளையே பெற்றது.
 

25

இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில்... 'ஜெயிலர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில், ரம்யா கிருஷ்ணன், விநாயக், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அண்ணாத்த படத்தை தயாரித்த சன் பிச்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரித்து வருகிறது.

மேலும் செய்திகள்: மர்மநபர்களால் தாக்கப்பட்ட நடிகர் விஷாலின் வீடு..! போலீசில் பரபரப்பு புகார்..!
 

35

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடைவதற்கு முன்பாகவே ரஜினிகாந்த் அடுத்து தன்னுடைய 170 ஆவது படத்தை யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார், அந்த படத்தில் நடிக்க அவருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி சில விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.
 

45

தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினி அடுத்ததாக லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை சிவகார்த்திகேயனை வைத்து 'டான்' படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்: சிக்கிய சுஹாசினி! 'பொன்னியின் செல்வன்' ரிலீசுக்கு முன்பே வீடியோ வெளியிட்டு வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்!
 

55

இந்த படத்திற்காக ரஜினிக்கு மட்டும் 120 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 'அண்ணாத்த' படத்திற்கு சுமார் 110 கோடி சம்பளம் வாங்கிய ரஜினி, 47 வருடங்களாக தன்னுடைய சம்பளத்தை குறைக்காமல்... தொடர்ந்து ஏற்றிக்கொண்டே செல்கிறார் என சில விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது. மேலும் ரஜினிகாந்தின் 170 ஆவது படம் குறித்த தகவல், டிசம்பர் 12ஆம் தேதி அவரது பிறந்தநாள் அன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் பிளண்டர் மிஸ்டேக்! புதையல் பெட்டியில் கல்லை மாற்றியது எப்படி? சந்திரகலா டிராமாவில் இவ்வளவு லாஜிக் மீறலா?
Recommended image2
2 நாளில் புதையலை மீட்காவிட்டால் பதவி அவுட்! சந்திரகலா விரித்த வலையில் சிக்கிய சாமுண்டீஸ்வரி - பரபரக்கும் பஞ்சாயத்து!
Recommended image3
ஆனந்திக்கு புகுந்த வீட்டு சீர் கொண்டு வந்த அண்ணன், அக்கா! ஆத்திரத்தில் கொதிக்கும் லலிதா மற்றும் துளசி - சிங்கப் பெண்ணே அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved