சிக்கிய சுஹாசினி! 'பொன்னியின் செல்வன்' ரிலீசுக்கு முன்பே வீடியோ வெளியிட்டு வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்!
பொன்னியின் செல்வன் பட புரோமோஷனில் இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு சைலண்டாக வம்பிழுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
திரைப்பட விமர்சகரும், இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன் அவ்வப்போது திரைப்படங்கள் குறித்து விமர்சித்து சர்ச்சைகளில் சிக்குபவர். சமீபத்தில் கூட 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்திற்கு, சிம்புவின் ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும், பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்த போதும்... அந்த படத்தை நெகட்டிவாக விமர்சித்ததால் பலர் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக இயக்குனர் கௌதம் மேனன் பேட்டி ஒன்றில், ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் குறித்து மறைமுகமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்: காதலில் சிக்கி விட்டாரா ஜான்வி? உன்னுடன் இல்லாதது சோகமான நாள்... அவுட்டோர் பதிவால் அப்செட்டான பிரபலம்!
இதைத்தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் ரிலீஸ்க்கு முன்பே சுஹாசினியின் வீடியோவை வெளியிட்டு வம்பிழுத்துள்ளார். கல்கியின் நாவலை தழுவி இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் பெரிதாக உள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் பணியில் தற்போது பட குழுவினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் தொடர்ந்து... சென்னை, ஹைதராபாத், பெங்களூர், டெல்லி, ஆகிய இடங்களில் புரோமோஷன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்: நடிகை ஆஷா பாரிக்கிற்க்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!
மேலும் அவ்வப்போது 'பொன்னியின் செல்வன்' புரோமோஷன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தின் புரோமோஷன் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நடந்தபோது, இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவியும் நடிகையுமான சுகாசினி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ஒரிஜினல் தமிழ் கதையாக இருந்தாலும், அதன் படபிடிப்பு 10 நாட்கள் மட்டுமே அங்கு நடந்தது. மீதமுள்ள படபிடிப்பு அனைத்தும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தான் நடந்தது. அதனால் இது உங்கள் படம் இந்த படத்தை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசி பேசி இருந்தார்.
மேலும் செய்திகள்: டீப் நெக் கவர்ச்சியில் முன்னழகை மிடுக்காக காட்டி அட்ராசிட்டி செய்யும் ராஷ்மிகா! இளசுகளை ஏங்க வைத்த ஹாட் போஸ்!
சுஹாசினியின் இந்த வீடியோவை வெளியிட்டு, 'பொன்னியின் செல்வன்', படப்பிடிப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தான் அதிகம் நடந்துள்ளது. ஆகவே இது தெலுங்கு மக்களின் படம். இப்படத்தை நீங்கள் தான் வெற்றியடைய செய்ய வேண்டும் - Suhashini at PS 1 Promo event in Andhra. என ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார். இவரை இந்த பதிவை கண்டு சிலர்... பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகும் முன்பே ப்ளூ சட்டை மாறன் சைலண்டாக வம்பிழுத்துள்ளதாக கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் ஆந்திராவில் சென்று பட ப்ரமோஷனல் ஈடுபடும் போது, பிரபலங்கள் இதுபோன்று பேசுவது வாடிக்கையான ஒன்றுதான் என சில கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.